districts

பசுந்தீவனம் வளர்க்க விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூர், ஜூன் 15-

    பெரம்பலூர் கால்நடை பராமரிப்புத் துறையின்  மூலம் தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தென்னை  மற்றும் பழத்தோட்டங்களில் ஊடுபயிராக பசுந்தீவ னம் வளர்க்க ஒரு ஏக்கருக்கு ரூ.3,000 முதல் ஒரு ஹெக்டேருக்கு ரூ.7,500 வரை விவசாயிகளுக்கு அரசால் மானியமாக வழங்கப்படுகிறது.  

    மேலும் குறைந்தது 0.50 ஏக்கர் அதிகபட்சமாக 1 ஹெக்டேர் நிலப்பரப்பில் தொடர்ந்து பல்லாண்டுகள் பயன் தரும் தீவன பயிர்களை ஊடுபயிராக பயிரிட்டு  மூன்று வருடகாலம் பராமரிக்க வேண்டும். பசுந்தீவ னம் உற்பத்தி செய்ய விருப்பமுள்ள சிறு மற்றும் குறு விவசாயிகள் மற்றும் பெண் விவசாயிகள் முக்கி யமாக எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.  

   எனவே. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் தென்னை மற்றும் பழத்தோட்டம் உள்ள விவசாயி கள் தங்கள் கிராமத்திற்கு அருகில் உள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை அணுகி திட்ட விபரங்களை பெற்று உரிய படிவத்தில் தங்க ளுடைய புகைப்படம், குடும்ப அட்டையின் நகல்,  அலைபேசி எண், ஆதார் எண் தங்கள் பெயரில் உள்ள  நிலத்திற்கான சான்று மற்றும் தேசிய மயமாக்கப் பட்ட வங்கிக் கணக்கு புத்தக நகல் ஆகியவற்றுடன் ஜூன் 20-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் தெரிவித்துள்ளார்.