districts

img

காலிப் பணியிடங்களை நிரப்புக! - அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

அரியலூர், ஜூலை 3- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர், ஜெயங் கொண்டம், செந்துறை, ஆண்டி மடம் ஆகிய வட்டாட்சியர் அலுவ லகங்கள் முன்பு தமிழ்நாடு அரசு  ஊழியர் சங்கத்தினர் செவ்வா யன்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். 21 மாத கால ஊதிய மாற்ற நிலுவைத் தொகை, முடக்கி  வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படி  மற்றும் சரண்டர் தொகை உள்ளிட்ட வற்றை வழங்கிட வேண்டும். சத்து ணவு மற்றும் அங்கன்வாடி பணியா ளர்களுக்கும், வருவாய் கிராம உதவியாளருக்கும், ஊர்ப்புற நூலகர், எம்.ஆர்.பி.செவிலியர் உள்ளிட்டவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக் கால மாக முறைப்படுத்த வேண்டும். அரசுத் துறைகளிலுள்ள காலிப்  பணியிடங்களை நிரப்பிட வேண் டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை கள் வலியுறுத்தப்பட்டன. அரியலூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் பாக்கியம் விக்டோரியா தலைமை வகித்தார்.  மாவட்டச் செயலர் ஷேக் தாவூத்  கோரிக்கை விளக்கவுரையாற்றி னார். ஆண்டிமடத்தில் வட்டாரத்  தலைவர் பழனிசாமி, ஜெயங்கொண் டத்தில் செயலர் வேல்முருகன், செந்துறையில் பொருளாளர் காமராஜ் ஆகியோர் தலைமை யில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கும்பகோணம் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மற்றும் ஓய்வூதியர் சங்கம்  சார்பில் தஞ்சாவூர் மாவட்டம் கும்ப கோணம் வட்டாட்சியர் அலுவல கத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க  கும்பகோணம் வட்டத் தலைவர் வெங்கடேசன் தலைமை வகித்தார்.  அரசு ஊழியர் சங்கம் சார்பில்  திருவிடைமருதூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற  ஆர்ப்பாட்டத்திற்கு திருவிடைமரு தூர் அரசு ஊழியர் சங்க வட்டத் தலைவர் கண்ணன் தலைமை வகித்தார்.  கரூர்  தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கரூர் வட்டக்கிளை 1  சார்பில் கரூர் வட்டாட்சியர் அலுவ லகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு எல்.பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாவட்ட தலை வர் எம்.எஸ்.அன்பழகன் கண்டன உரையாற்றினார். கரூர் வட்டக்கிளை 3 சார்பில்  அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனை முன்பு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு கிளை தலைவர் சி. கண்ணன் தலைமை வகித்தார்.  மாவட்ட துணை செயலாளர்கள் எஸ்.முத்துமாரி, முருகேசன் ஆகி யோர் கண்டன உரையாற்றினர். மண்மங்கலம் வட்டாட்சியர் அலுவ லகம் முன்பு நடைபெற்ற கண்டன  ஆர்ப்பாட்டத்திற்கு வட்டத் தலை வர் கோபி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் எம்.எஸ்.அன்பழ கன், பாலசுப்பிரமணியன், விஜய குமார் ஆகியோர் கண்டன உரை யாற்றினர். க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட தலைவர் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். மருந்தாளுநர் சங்க மாநில செயலாளர் இளங்கோ,  சிவராமன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். அரவக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட தலைவர் தங்கபாண்டியன் தலைமை வகித்தார். மாவட்ட குழு உறுப்பினர்கள் உதயகுமார், பாஸ்கரன் கண்ட உரையாற்றினர். கடவூர் வட்டாட்சியர் அலுவல கம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு வட்ட தலைவர் சங்கர் தலைமை வகித்தார். மாவட்ட செய லாளர் பொன்.ஜெயராம் கண்டன  உரையாற்றினார். கிருஷ்ணராய புரம் ஊராட்சி ஒன்றிய அலுவல கம் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட தலைவர்  தமிழ்மணி தலைமை வகித்தார். எம். செல்வராணி கண்டன உரையாற்றி னார். குளித்தலை வட்டாட்சியர் அலு வலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில் சங்கத்தின் மாநில துணைத்  தலைவர் மு.செல்வராணி, ஓய்வூதி யர் சங்கம் அறிவழகன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.  கரூர் வட்டக் கிளை 2 சார்பில்  கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் கரூர் வட்ட கிளை செயலாளர் முருகேஷ் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்கத்தின் கரூர் மாவட்ட செய லாளர் பொன் ஜெயராம், மாவட்ட தலைவர் எம்.எஸ்.அன்பழகன், மாவட்ட பொருளாளர் பாலசுப்பிர மணியன் உள்ளிட்டோர் கண்டன  உரையாற்றினர். இதில் நூற்றுக்கும்  மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

;