districts

img

டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்க!

திருச்சிராப்பள்ளி, ஜூலை 1 - திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார்  தலைமையில் திங்களன்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.  இதில், அனைத்துக் கட்சிகள் மற்றும் கக்கன் காலனி பொதுமக்கள் மாவட்ட ஆட்சி யரிடம் கொடுத்த மனுவில் கூறியிருந்ததா வது:  திருவெறும்பூர் கக்கன் காலனி பகுதியில்  குடியிருப்பு, மருத்துவமனை, கோவில் அமைந்துள்ள பகுதிகளில் டாஸ்மாக் கடை உள்ளது. மேலும், இந்த கடை நவல்பட்டு ரோடு மற்றும் சர்வீஸ் சாலையில் உள்ளதால்  நெரிசல் ஏற்பட்டு, அடிக்கடி போக்குவ ரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.  மேற்படி டாஸ்மாக் கடையை இடமாற்றம்  செய்ய வேண்டும் என அரசியல் கட்சிகள்  தனித்தனியாக போராட்டங்கள் நடத்தி யுள்ளன. போராட்டங்களின் காரணமாக பல முறை தாசில்தார் முன்னிலையில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்று, மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையின் பேரில் டாஸ்மாக்  கடையை இடமாற்றம் செய்ய டாஸ்மாக் அதிகாரிகள் ஏற்றுக்கொண்டு பல்வேறு அரசியல் கட்சிகளோடு ஒப்பந்தங்கள் போடப் பட்டுள்ளன.  சமீபத்தில் 12.6.2024, 20.6.2024 ஆகிய தேதிகளில் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டு 15 நாட்களில் கடையை இட மாற்றம் செய்யும்படி டாஸ்மாக் டி.எம்.-யிடம்  மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். ஆனால்  டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய இது வரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே மேற்படி டாஸ்மாக் கடையை இட மாற்றம் செய்யவில்லையெனில், அனைத்துக்  கட்சிகளும், பொதுமக்களும் இணைந்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை தொடர்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநகர் மாவட்டத் தலைவர் கே.சி. பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காட்டூர் பகுதி செயலாளர் மணிமாறன், கக்கன் காலனி  செயலாளர் நாகூர்மைதின், வாலிபர் சங்கத்தி னர், மாதர் சங்க புறநகர் மாவட்டச் செயலா ளர் கோமதி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தொகுதி செயலாளர் ரமேஷ், வழக்கறிஞர் தீனா, காங்கிரஸ் கட்சி மாநகர் மாவட்டச் செயலாளர் சேக்தாவுத், அதிமுக காதர், சுப்ரமணி, மதிமுக மாரியப்பன் மக்கள் அதி காரம் கார்கி ஆகியோர் மாவட்ட ஆட்சி யரிடம் மனு கொடுத்தனர்.

;