சிபிஎம் பேரவை
அரியலூர், ஜன.24 - அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஜூப்ளி சாலையில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் பேரவை கூட்டம் ஒன்றியச் செயலாளர் வெங்கடாசலம் தலை மையில் நடைபெற்றது. மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.வாலண்டினா பேசி னார். கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் இளங்கோவன், மாவட்ட குழு, ஒன்றிய குழு உறுப் பினர்கள் கலந்து கொண் டனர். இதேபோல் தா. பழூரில் ஒன்றியச் செய லாளர் ஜெ.ராதா கிருஷ்ணன் தலைமையி லும், ஆண்டிமடத்தில் வட்டச் செயலாளர் வி. பரமசிவம் தலைமை யிலும் பேரவை கூட்டம் நடைபெற்றது.
வேளாண் இயந்திரங்கள் வாடகைக்கு பெறலாம்
கொள்ளிடம், ஜன.24 - மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் வட்டாரத்தைச் சேர்ந்த விவசாயிகள் அறுவடை இயந்திரத்தை வாட கைக்கு எடுத்து பயன் படுத்தி கொள்ளுமாறு வேளாண் உதவி இயக் குநர் அறிவுறுத்தி யுள்ளார். இதுகுறித்து கொள் ளிடம் வேளாண் உதவி இயக்குநர் எழில்ராஜா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “வேளாண் இயந்திரங்கள் வாடகை திட்டத்தின்கீழ் இரண்டு வகையான நெல் அறு வடை இயந்திரம் உள் ளது. ஒரு மணி நேரத்திற்கு வாடகை கட்டணம் ரூ.1880 வீதம் குறைந்த கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்த சேவையை விவ சாயிகள் பெறுவதற்கு உழவன் செயலி மூலம் முன்பதிவு செய்து பயன் படுத்தலாம். விவசாயி கள் அறுவடை இயந்தி ரத்தை வாடகைக்கு குறைந்தபட்சம் 5 மணி நேரத்துக்கு குறைவு இல்லாமல் பயன் படுத்திக் கொள்ள, முன் பதிவு செய்ய வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் விழிப்புணர்வு பாட்டுப் போட்டி
கும்பகோணம், ஜன.24 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரியில் தேர்தல் விழிப்புணர்வு தொடர்பான பாட்டுப் போட்டி நடத்தப்பட்டது. கல்லூரி முதல்வர் அ. மாதவி தலைமையில், தேர்தல் எழுத்தறிவுக் கழகம் ஒருங்கிணைப் பாளர் த.தமிழ்வாணன் முன்னிலையில் இப் போட்டி நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக நூலகர் பேரா. ரா.சங்கர லிங்கம் கலந்து கொண் டார். பல்வேறு துறை யைச் சார்ந்த மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். பாட்டுப் போட்டியில் பங்கேற்ற பொருளியல் துறை 2 ஆம் ஆண்டு மாணவி சூ.நித்யஸ்ரீ முதலிடம் பிடித்தார். 3 ஆம் ஆண்டு மாணவி ஹ.மஞ்சுளா இரண்டாம் இடம் பிடித்தார். மாணவி ஏ.பிரியங்கா மூன் றாமிடம் பிடித்தார். இவர் கள் மாவட்ட அளவி லான பாட்டுப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள னர். மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெறும் மாணவ, மாணவி களுக்கு முதல் பரிசாக ரூ.10,000/-, 2-வது பரி சாக ரூ.5000/-, 3-வது பரி சாக ரூ.3000/- மாநில தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட உள்ளது.
அறிவைத் தேடும் வழியாக கல்வியைப் பயன்படுத்த வேண்டும் மாணவர்களுக்கு ஆட்சியர் அறிவுரை
புதுக்கோட்டை, ஜன.24 - அறிவைத் தேடும் வழியாக கல்வியைப் பயன்படுத்த வேண்டும் என்றார் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா. புதுக்கோட்டை நகராட்சி, நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா புதன் கிழமை பார்வையிட்டார். பின்னர் ஆட்சியர் தெரிவிக்கையில், “புதுக்கோட்டை காந்தி பூங்கா அருகில் செயல் பட்டு வரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தின் செயல்பாடுகள் பார்வையிடப் பட்டது. இம்மையத்தில் மாணவர்களின் வசதிக் காக இணையதளத்துடன் கூடிய கணினிகள், புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. ‘புதுமைப் பெண்’ திட்டம் மூலம் உயர் கல்வி பயிலும் மாணவிகளின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. ‘பெண்கள் கல்வியின் முக்கியத்துவம்’ குறித்து மாவட்ட சமூகநல அலுவலரும், ‘போட்டித் தேர்வுகள்’ குறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரும் மாணவ, மாணவிகளிடம் கலந்துரையாடினர். மாணவ, மாணவிகள் அறிவை தேடும் வழியாக உயர் கல்வியை பயன்படுத்த வேண்டும். இதன்மூலம் கல்வியில் சிறந்த மாவட்டமாக புதுக்கோட்டை மாவட்டத்தை மாற்றி, தங்களது குடும்பத்திற்கும், சமுதா யத்திற்கும் நல்லதொரு குடிமகனாக விளங்க வேண்டும்” என்றார். நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், மண்டல இணை இயக்குநர் (ஓய்வு) முனை வர் ப.சுரேஷ்குமார், மாவட்ட மனநல மருத் துவர் மரு.ரெ.கார்த்திக் தெய்வநாயகம், மாவட்ட சமூகநல அலுவலர் க.ந.கோகுலப் பிரியா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (தொ.வ) பெ.வேல்முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மீன்பாசி குத்தகை உரிமையை பொது ஏலத்தில் விட முடிவு
தஞ்சாவூர், ஜன.24 - தஞ்சாவூர் மாவட்ட மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமை யின் கீழ், பாபநாசம் வட்டம் அம்மாபேட்டை சரகத்தில் உள்ள வலையன்குளம், அய்யனார்குளம் மற்றும் நரிக்குளம் ஆகிய குளங்களின் மீன்பாசி குத்தகை உரிமையை 1433-ஆம் பசலிக்கு பொது ஏலத்தில் விடுவதற்கு முடிவு செய்யப்பட்டு உள்ளது. எனவே, பொது ஏலத்தில் எடுக்க விரும்புவர்கள் எண்: 873/4. அறிஞர் அண்ணாசாலை, கீழவாசல், தஞ்சாவூர் என்ற முகவரியில் இயங்கும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுக வேண்டும். ஏலம் எடுக்க விரும்புவோர், இந்த அலுவலகத்தில் 31.1.2024 அன்று காலை 11 மணியளவில் நடைபெறும் பொது ஏலத்தில் கலந்து கொள்ளுமாறு ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.
பள்ளிகளில் தேசிய பெண் குழந்தைகள் தின விழா
அரியலூர்/மயிலாடுதுறை, ஜன. 24- அரியலூர் மாவட்ட பள்ளிகளில் புதன்கிழமை தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது. அரியலூர் நிர்மலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில் நடை பெற்ற தேசிய பெண் குழந்தைகள் தின விழாவுக்கு மாவட்ட உரிமையியல் மற்றும் கூடுதல் மகளிர் நீதிமன்ற நீதிபதி கற்பகவள்ளி தலைமை வகித்து உரையாற்றினார். முன்ன தாக பள்ளி முதல்வர் பிரேமா வரவேற்றார். ஆசிரியை லில்லி மேரி நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரி யைகள், மாணவிகள் என 800-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சிறுவளூர் சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமை வகித்து பேசினார். முன்னதாக அனைவரும் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். மயிலாடுதுறை மயிலாடுதுறை மாவட்டம் கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் தேசிய பெண் குழந்தைகள் தின விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி கலந்து கொண்டு, பேச்சுப் போட்டி, ஓவியப்போட்டி, மாறுவேடப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு கேடயங்களை வழங்கினார்.
இந்திய கப்பல் படையில் சேர மீனவ இளைஞர்களுக்கு பயிற்சி
கடலோர பாதுகாப்பு குழுமம் ஏற்பாடு
தஞ்சாவூர், ஜன.24 - தஞ்சாவூர் மாவட்ட மீனவர் கிரா மங்களைச் சேர்ந்த படித்த இளைஞர் களுக்கு, இந்திய கடலோர காவல் படை, இந்திய கப்பல் படையில் சேர பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுகுறித்து, கடலோர பாதுகாப்பு குழும பட்டுக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் பிரான்சிஸ் வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி யிருப்பதாவது: தமிழக மீனவர்களின் வாரிசுகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அவர்கள் இந்திய கடலோர காவல் படை மற்றும் இந்திய கப்பல் படையில் நவிக் பொது மற்றும் மாலுமி பணி களிலும், இதர தேசிய பாதுகாப்பு பணி யிலும் சேர்வதற்கு ஏதுவாக வழி காட்டுதல் இலவச சிறப்பு பயிற்சி வகுப்புகள், தமிழக கடலோர பாது காப்பு குழுமத்தின் மூலம் நடத்தப்படு கிறது. அதன்படி கடலோர பாதுகாப்பு குழுமம் மூலம் அளிக்கப்படவிருக்கும் (வழிகாட்டுதல்) சிறப்புப் பயிற்சி வகுப்பிற்கு தேர்வு செய்யப்படுவதற்கு, தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற் கப்படுகின்றன. விண்ணப்பத்தை சமர்ப் பிக்க வேண்டிய கடைசி நாள்: 08.2. 2024, மாலை 5.45 மணி. விண்ணப்ப படிவம் மற்றும் மேலும் விபரங்களை https://drive.google.com/drive/folders/10LkWukq_HyRgbyrerIchqzQRhGx6A-wn என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ள லாம். வயது: (1.2.2003 முதல் 31.1.2006-க்குள் பிறந்திருக்க வேண்டும் (இரண்டு நாட்களும் உள்ளடக்கி) எஸ்.சி/எஸ்.சி (ஏ) மற்றும் எஸ்.டி. குறைந்தபட்ச வயது 18, அதிகபட்ச வயது 27. எம்.பி.சி/டி.சி, பி.சி, பி.சி.எம். குறைந்தபட்ச வயது 18, அதிகபட்சம் 25. மற்றவை (அதாவது எஸ்.சி/ எஸ்.சி (ஏ) மற்றும் எஸ்.டி., எம்.பி.சி/டி.சி, பி.சி, பி.சி.எம். அல்லாதவர்கள்) குறைந்த பட்ச வயது 18, அதிகபட்சம் 22. நவிக் (பொதுப்பிரிவு): 10, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மொத்த மதிப்பெண்களில் 50 சதவீதத் துக்கு கூடுதலாக இருக்க வேண்டும் (கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்க ளில் தனித்தனியாக 50 சதவீதத்திற்கு கூடுதலாக மதிப்பெண் பெற்று இருக்க வேண்டும்). மாலுமி–II: 10, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மொத்த மதிப்பெண்களில் 50 சதவீதத்திற்கு கூடுதலாக இருக்க வேண்டும் (கணி தம் மற்றும் இயற்பியல் பாடங்களில் தனித்தனியாக 50 சதவீதத்திற்கு கூடுத லாக மதிப்பெண் பெற்று இருக்க வேண்டும்). உயரம் குறைந்த அளவு 157 செ.மீ இருத்தல் வேண்டும். மலைவாழ் மற்றும் பழங்குடியினருக்கு குறைந்த பட்ச உயரம் அளவில் ஒன்றிய அரசு ஆணையின்படி தளர்வு அளிக்கப்ப டும். மார்பளவு அனைத்து வகுப்பி னருக்கும் சாதாரண நிலையில் குறைந்த பட்சம் 81 செ.மீ இருக்க வேண்டும். மூச்சடக்கிய நிலையில் குறைந்தபட்சம் 5 செ.மீ. மார்பக விரிவாக்கம் இருத்தல் வேண்டும். உரிய கல்வித் தகுதியும், உடற்கூறு தகுதிகளும் பெற்றுள்ள மீனவர் வாரிசு கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
குறுங்காடுகளை உருவாக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தும் அரசு ஊழியர்
கும்பகோணம், ஜன.24- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே இந்து சமய அறநிலையத்துறை நாச்சியார்கோவில் சீனிவாச பெருமாள் கோயில் செயல் அலுவலராக பிரபாகரன் பணியாற்றி வரு கிறார். இயற்கை ஆர்வலரான இவர், மரக்கன்றுகளை நட்டு, குறுங்காடுகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறார். மேலும், தனக்கு தெரிந்தவர்களை ஊக்கப்படுத்தி தனது சொந்த நிதி யிலிருந்து மாதந்தோறும் மரக்கன்றுகளை வழங்கி இயற்கை வளம் பெருக உதவி செய்து வருகிறார். வனக்காடுகள் வளர்ப்பு குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறார். இந்நிலையில் இவர் பணியாற்றும் நாச்சியார்கோவில் சீனிவாச பெருமாள் கோவிலுக்கு சொந்தமான சிட்டுக்குருவி தோப்பு என்று அழைக்கப்படும் தோப்பு, தற்போது மரங்கள் அற்ற நிலையில் உள்ளது. இதுகுறித்து அறிந்த இயற்கை ஆர்வலர் பிரபாகரன், வனத்துறை மூலம் 500 மரக்கன்று களை தோப்பில் (இலுப்பை மரம், வேம்பு, தேக்கு மரம், செம்மரம், நாவல் மரம், மூங்கில் மரம், நீர்மருது போன்ற மரங்கள்) நடும் பணியை மேற்கொண்டார். இதில், இயற்கை ஆர்வலர்கள் வனத்துறையினர் பங்கேற்றனர். வருங்காலத்தில் இந்த இடம் குறுங்காடுகளாக உருவாக வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.