districts

img

தோழர் கோடியேரி பாலகிருஷ்ணனுக்கு அஞ்சலி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரான தோழர் கோடியேரி பாலகிருஷ்ணன் மறைவையொட்டி மயிலாடுதுறையில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்தில் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்ட செயலாளர் பி.சீனிவாசன் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர செயலாளர்கள், மாவட்ட, ஒன்றியக்குழு உறுப்பினர்கள், வாலிபர், மாணவர் சங்கத்தினர் அஞ்சலி செலுத்தினர்.

;