திருச்சிராப்பள்ளி, ஏப்.30- கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் குற்ற வியல் நீதிமன்றத்தில் துணை நாசராகப் பணிபுரியும் நடராஜனுக்கு, இரண்டு மாத மாக மருத்துவ விடுப்பு வழங்காமலும், ஊதியம் வழங்காமல் இருந்ததாலும், பாதிக் கப்பட்ட அவர் நீதிமன்ற வளாகத்திலேயே கடந்த ஏப்.25 அன்று விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். மேற்படி ஊழியர் தற்கொலை முயற்சி செய்யும் அளவுக்கு கொடுமை இழைத்த அர வக்குறிச்சி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிபதி மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், பாதிக்கப்பட்ட ஊழிய ருக்கு ஊதியத்தை உடனடியாக வழங்க நட வடிக்கை எடுக்க கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தை வலியுறுத்தி, திருச்சி நீதித் துறை ஊழியர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு வாயிற்கூட்டம் நடைபெற்றது. திருச்சி மாவட்ட நீதிமன்ற வளாக வாயி லில் நடந்த கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ரஞ்சித்குமார் தலைமை வகித்தார். கூட்டத் தில் திருச்சி மாவட்ட அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் பால்பாண்டி, மாவட்டப் பொருளாளர் தில்லை கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். மாவட்ட நிர்வாகிகள், துணைத் தலை வர்கள், இணைச் செயலாளர்கள் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர்.