districts

திருச்சியில் வாசனை திரவிய தொழிற்சாலை அமைக்க வேண்டும்

திருச்சிராப்பள்ளி, செப்.12 - திருச்சி மாவட்டத்தில் வாசனை திரவிய,  ஜவ்வாது தொழிற்சாலைகள் அமைக்க வேண்டுமென விவசாயிகள் சங்கம் கோரிக் கை வைத்துள்ளது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருச்சி புறநகர் மாவட்டக் குழு கூட்டம் செவ் வாயன்று மணப்பாறையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க புறநகர் மாவட்டத் தலைவர் சிதம்பரம்  தலைமை வகித்தார். மாநில துணைத் தலை வர் முகமதுஅலி, மாவட்டச் செயலாளர் நட ராஜன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறக்க ஒன்றிய அரசு உத்தரவு பிறப்பித்து, குறுவை சாகுபடியை பாதுகாக்க வேண்டும். செப்.20 அன்று காவிரி படுகை பாது காப்பு கூட்டு இயக்கம் சார்பில் நடைபெறும் தர்ணா போராட்டத்தை வெற்றி பெற செய்வது  என முடிவு செய்யப்பட்டது.  திருச்சி மாவட்டத்தில் பூக்களில் இருந்து  வாசனை திரவியம் தயாரிக்கும் தொழிற் சாலை அமைக்க வேண்டும். மரவள்ளி கிழங்கிற்கு அரசே விலை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்ய வேண்டும். ஜவ்வாது தொழிற்சாலை அமைக்க வேண்டும். உப்பாறு  நீர்த்தேக்கத்திற்கு தண்ணீர் கொண்டு வர  தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அரியலூர் அரியலூரில் நடைபெற்ற தமிழ்நாடு காவிரி படுகை பாதுகாப்பு இயக்கத்தின் மாவட்ட ஆலோசனை கூட்டத்தில், அரிய லூர் மாவட்ட கொள்ளிடம் ஆற்றில் கதவணை யுடன் கூடிய தடுப்பணை கட்டி பாசனத்திற்கு  தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திட வேண்டும். கர்நாடக அரசிடம் இருந்து  உரிய நீரை பெற்றுத் தர காவிரி ஆணை யம் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி செப்.20 அன்று  அரியலூரில் தொடர் முழக்க போராட்டத்தை நடத்துவது, இதில் அனைத்து விவசாய சங்கங்களும் கலந்து கொள்வது என தீர்மா னிக்கப்பட்டது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாவட்டச் செயலாளர் இளங்கோவன் உட்பட  மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து விவசாய  சங்க பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்