districts

img

வள்ளுவர் கோட்டத்தில் புனரமைப்பு பணிகள் 75 விழுக்காடு நிறைவு

சென்னை, நவ.30- வள்ளுவர் கோட்டத்தை புனரமைக்கும் பணிகள் 75விழுக்காடு  நிறைவடைந்துள்ள நிலையில் மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தியுள்ளார். வள்ளுவர் கோட்டத்தை புதுப்பிக்க ரூ.80  கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் துவங்கப்பட்டது. இந்த அமைச்சர் எ.வ.வேலு  வள்ளுவர் கோட்டப் புனரமைக்கும் அனைத்து  பணிகளை ஆய்வு செய்து செய்தியாளர்களிடம் அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது: தோரண வாயில் முகப்பில், அழகு மிளிரச் செய்யும் ஸ்தபதி களின் பணிகளை பார்வையிட்டு, துரிதமாக  முடிக்க வேண்டும். மின் பணிகள் பெரும்பகுதி  முடிவடைந்துள்ளது. கலையரங்கம், குறள்  மணிமண்டபம், தோரணவாயில் கட்ட டங்களில் நடைபெற்று வரும் மின் பணிகளையும்  விரைந்து முடிக்க வேண்டும். பல்லடுக்கு  வாகன நிறுத்துமிட கூரை கான்கிரீட்  போடப்பட்டுள்ளது. கலையரங்கத்தில் பால்ஸ்  சீலிங் பணி மற்றும் வால்பேனலிங் பணிகள்  நடைபெற்று வருகிறது. பொது மக்கள், பார்வை யாளர்கள், சுற்றுலா பயணிகள் ஆகியோர் களுக்காக ஏற்படுத்தப்பட்ட பல்வேறு வசதி களை, பொதுப்பணித்துறை பொறியாளர்கள் விரைந்து முடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.