districts

img

மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதியில் 39 வாக்குச்சாடிவகள் பதற்றமானவை

மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதியில், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி (தனி), மயிலாடுதுறை, பூம்புகார், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவிடைமருதூர் (தனி), கும்பகோணம் மற்றும் பாபநாசம் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகள் அடங்கி உள்ளன. மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள வாக்காளர் விபரங்கள்: திருவிடைமருதூர் தொகுதியில் 1,29,479 ஆண் வாக்காளர்களும், 1,32,633  பெண் வாக்காளர்களும், 12 மூன்றாம்  பாலினத்தவர்களும், கும்பகோணம் தொகுதியில் 1,29,856 ஆண் வாக்காளர் களும், 1,36,899 பெண் வாக்காளர்களும், 14 மூன்றாம் பாலினத்தவர்களும், பாப நாசம் தொகுதியில் 1,27,105 ஆண் வாக்கா ளர்களும், 1,32,979 பெண் வாக்காளர் களும், 21 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 3,86,440 ஆண் வாக்கா ளர்களும், 4,02,511 பெண் வாக்காளர் களும், 47 மூன்றாம் பாலினத்தவர்களும் உள்ளனர்.

மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதியில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் தேர்தல் நடத்தும் அலுவலராகவும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக சீர்காழி சட்டமன்ற தொகுதிக்கு சீர்காழி வருவாய் கோட் டாட்சியர் உ.அர்ச்சனா,  சீர்காழி வட்டாட்சியர் இளங்கோவன், மயிலாடுதுறை சட்டமன்றத் தொகுதிக்கு வருவாய் கோட்டாட்சியர் வ.யுரேகா, மயிலாடு துறை வட்டாட்சியர் விஜயராணி, பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்கு தனித் துணை ஆட்சியர் சமூக  பாதுகாப்புத் திட்டம் கீதாராணி, தரங்கம் பாடி வட்டாட்சியர் மகேஷ்,  திருவிடைமருதூர் சட்ட மன்ற தொகுதிக்கு தஞ்சா வூர் மாவட்ட வழங்கல்  அலுவலர்  கமலக்கண்ணன், திருவிடைமருதூர் வட் டாட்சியர் பாக்கியராஜ், கும்பகோணம் சட்ட மன்றத் தொகுதிக்கு கும்ப கோணம் வருவாய் கோட்டாட்சியர் எஸ்.பூர்ணிமா, கும்பகோணம்  வட்டாட்சியர் வெங்கடேஸ்வரன், பாப நாசம் சட்டமன்ற தொகுதிக்கு தஞ்சாவூர்  மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை  அலுவலர் முத்துகிருஷ்ணன், பாபநாசம்  வட்டாட்சியர் மணிகண்டன் ஆகி யோர் தேர்தல் ஆணையத்தால் நிய மிக்கப்பட்டுள்ளனர்.

வாக்குச்சாவடிகள்

திருவிடைமருதூர் தொகுதியில் 293 வாக்குச்சாவடிகளும், கும்பகோணத்தில் 289 வாக்குச்சாவடிகளும், பாபநாசத்தில் 301 வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 883 வாக்குச்சாவடிகள் உள்ளன. பதற்ற மான வாக்குச்சாவடிகளாக திருவிடை மருதூரில் 15, கும்பகோணத்தில் 13, பாப நாசத்தில் 11  என மொத்தம் 39 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப் பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளுக்கு கூடுதல்  பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு  உள்ளன. மேலும் இந்த வாக்குச்சாவடி களுக்கு நுண் பார்வையாளர்கள் நிய மிக்கப்பட உள்ளனர். வாக்குச்சாவடி களில் வெப் கேமரா பொருத்தப்பட்டு வாக்குப்பதிவு நடவடிக்கைகள் கண் காணிக்கப்படும்.  திருவிடைமருதூரில் 25 மண்டல எண் ணிக்கையும், கும்பகோணத்தில் 24  மண்டல எண்ணிக்கையும், பாபநாசத் தில் 26 மண்டல எண்ணிக்கையும் என  மொத்தம் 75 மண்டல எண்ணிக்கையி லான அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ள னர். தேர்தல் தொடர்பான புகார்களுக்கு,  திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதிக்கு  0435-240187 என்ற எண்ணையும், கும்பகோ ணம் சட்டமன்றத் தொகுதிக்கு 0435-2430101 என்ற எண்ணையும், பாபநாசம் சட்டமன்றத் தொகுதிக்கு 0437-4222456  என்ற எண்ணையும் தொடர்பு கொள்ள லாம். வாக்குச்சாவடி பயிற்சி மையமாக திருவிடைமருதூரில் ஸ்டார் மெட்ரிக்  மேல்நிலைப் பள்ளி, அம்மாசமுத்திரமும், கும்பகோணத்தில் சிறிய மலர் மேல்நிலைப்  பள்ளி, பாபநாசத்தில் பாய்ஸ் மேல்நிலைப் பள்ளியும் உள்ளன.

 தொகுப்பு: சரவணன்