தஞ்சாவூர், ஜன.17 - தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் வளாகம் சுமார் ஆயிரம் ஏக்கர் பரப் பளவு கொண்டது. இங்கு நூற்றுக்கணக் கான பறவை இனம் இருப்பதாக பல்கலைக்கழகம் சார்பில் ஏற்கனவே பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு உள்ளன. இந்நிலையில், புதன்கிழமை தமிழ் நாடு வனத்துறை வனவர் இளஞ்செழி யன், வனக்காவலர் பூபதி, அருங்கா னுயிர் காப்பு மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் சதீஸ்குமார் குழுவினர், விதையால் ஆயுதம் செய் அமைப்பை சேர்ந்த நடராஜன், அமர்நாத், பொய்யாமொழி, சுற்றுச்சூழல் அமைப்புகள், பறவை யியல் வல்லுநர்கள், மாணவர்கள் என ஐம்பதுக்கும் மேற்பட்டோர் வளாகம் முழுவதும் பறவைகள் கணக்கெடுப் பில் ஈடுபட்டனர். குழுவிற்கு 10 பேர் வீதம் 5 குழுக் களாக பிரிக்கப்பட்டு தனித்தனியாக பல்கலைக்கழக வளாகத்தில், நடை பயணம் மேற்கொண்டு பறவைகள் குறித்து ஆய்வு செய்தனர். இதில், 33 இன வகைகளில், 527 எண்ணிக்கையிலான பறவைகள் இருப்பதாகவும், ஒரு சில நீர்ப்பறவை கள், தரைவாழ் பறவைகள் அதிகம் இருப்பதாகவும் கண்டறிந்துள்ளனர். அத்துடன் பறவைகள் கணக்கெடுப்பு தொடர்பாக குந்தவை நாச்சியார் கல்லூரி பேராசிரியர் சுகுமார், ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரி செல்வம் உள்ளிட்டோர் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர். முன்னதாக பயிற்சி வகுப்பை தமிழ்ப் பல்கலைக்கழக மக்கள் தொடர்பு அலுவலர் முருகன், தோட்டப் பிரிவு அலுவலர் சுவாமிநாதன் துவக்கி வைத்தார். இதுகுறித்து அருங்கானுயிர் காப்பு மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் சதீஷ் குமார் கூறுகையில், “தமிழ்ப் பல்கலைக் கழ கத்தில் பல்வேறு வகையான மரங்கள் இருப்பதால், பறவைகள் வாழ்வதற்கு ஏற்ற இடமாக உள்ளது. இது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத் தும் விதமாக பல்கலைக்கழக துணை வேந்தர் ஒத்துழைப்புடன் கணக்கெடுப்பு செய்தோம். வளாகத்தில் நீலமுக செண்பகம், சுடலை குயில், தேன் பருந்து, ஆசிய பச்சை தேன் உண்ணி என ஏராளமான பறவைகள் உள்ளன. பல்கலைக்கழகத் திற்கு அக்டோபர் முதல் பிப்ரவரி மாதத்தில் அதிகளவில் பறவைகள் வரு கின்றன. இங்குள்ள பறவைகள் இனம் அழியாமல் பாதுகாக்க பல்கலைக் கழகம் சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.