districts

அரியலூரில் சார்பதிவக எல்லைகள் சீரமைப்பு:

அரியலூர், டிச. 21 - வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சரால் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் 6.9.2021 அன்று 2021-2022  ஆம் ஆண்டிற்கான வணிகவரி மற்றும்  பதிவுத் துறையின் மானியக் கோரிக்கை யின் போது, பதிவுத் துறையில் சில  சார்பதிவக எல்லைகளில் ஒரு முக்கிய  வருவாய் கிராமமானது, ஒரு சார்பதிவா ளர் அலுவலகத்திலும் அதே வருவாய் கிராமத்திற்குட்பட்ட குக்கிராமம் வேறு ஒரு சார்பதிவாளர் அலுவலகத்திலும் அமைந்துள்ள நிலை உள்ளது. பட்டா மாற்றம் போன்ற பதிவுத் துறை - வருவாய்த்துறை ஒருங்கி ணைந்த செயல்பாடுகளுக்கு இது இடை யூறாக உள்ளது. எனவே, ஒரு வருவாய்  கிராமம் முழுவதையும் ஒரே சார்பதி வக எல்லைக்குள் கொண்டு வரும் வகை யிலும் கிராமங்கள் அனைத்தும் அருகி லுள்ள சார்பதிவக எல்லைக்குள் வரும்  வகையிலும் சார்பதிவக எல்லைகள் சீரமைக்கப்படும்” என அறிவிப்பு செய்யப்பட்டது.  

அரியலூர் பதிவு மாவட்டத்தை பொறுத்து, அரியலூர் வருவாய் மாவட் டத்திற்குட்பட்ட எண்.1 இணை சார்பதிவகத்தில் உள்ள சுப்புராயபுரம் மற்றும் கிருஷ்ணாபுரம் கிராமங்கள் கீழப்பழூர் சார்பதிவகத்திலும், எண்.2  இணை சார்பதிவகத்தில உள்ள அரிய லூர் தெற்கு கிராமம் எண்.1 இணை  சார்பதிவகத்திலும், கீழப்பழூர் சார்பதி வகத்தில் உள்ள ஆத்தூர் கிராமம் எண்.2  இணை சார்பதிவகத்திலும், ஜெயங் கொண்டம் சார்பதிவகத்தில் உள்ள  சூரியமணல் கிராமம் உடையார்பாளை யம் சார்பதிவகத்திலும், விக்கிர மங்கலம் சார்பதிவகத்தில் உள்ள அணிக் குறிச்சி கிராமம் உடையார்பாளையம் சார்பதிவகத்திலும் இணைக்கப்பட உள்ளது. இது தொடர்பாக துணைப் பதிவுத் துறைத் தலைவர் அலுவலகம், திருச்சி/ மாவட்டப் பதிவாளர் அலுவலகம் அரியலூர்/ சார்பதிவாளர் அலுவலகம் / வட்டாட்சியர் அலுவலகம் / கிராம நிர்வாக அலுவலகம் ஆகியவற்றில் பொதுமக்கள் பார்வைக்காக அறி விப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து அரியலூர் மாவட்ட ஆட்சியரின் தலைமையில் அரியலூர் ஆட்சியர் அலுவலகத்தில் 28.12.2021 அன்று மாலை 3 மணியளவில் பொதுமக்களின் கருத்துகேட்பு கூட்டம் நடத்தப்படவுள்ளது. அக்கூட்டத்தில் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்க ளின் கருத்துகளை தெரிவிக்கலாம் என  மாவட்ட ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.