மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மன்னார்குடி நகர மூத்த தலைவர்களில் ஒருவரான வெ.சீனிவாசனின் 20 ஆவது நினைவுதினம் ஞாயிறன்று கடைபிடிக்கப்பட்டது. தோழர் வெ.சீனிவாசன் உருவப்படத்திற்கு நகரச் செயலாளர் ஜி.தாயுமானவன் மாலை அணிவித்தார். தோழர் வெ.சீனிவாசனின் துணைவியார் சீ.வனரோஜா அவரது இல்லத்தில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் சிஐடியு தலைவர்கள், ஓய்வூதியர் சங்கத்தினர், தமுஎகச மற்றும் விவசாயிகள் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.