தமிழ்த் தாத்தா டாக்டர் உ.வே.சாமிநாதஐயரின் 170 ஆவது பிறந்த நாள் விழா திங்களன்று கடைப்பிடிக்கப்பட்டது. இந்நிலையில், திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டம், உத்தமதானபுரத்தில் அமைந்துள்ள உ.வே.சா நினைவு இல்லத்தில் அவரது உருவச்சிலைக்கு மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார், தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் துணைவேந்தர் முனைவர் வி.திருவள்ளுவன் உடனிருந்தார்.