districts

img

பெரம்பலூர் நகராட்சி 16 ஆவது வார்டு சிபிஎம் வேட்பாளர் ஏ.கலையரசி வாக்குச் சேகரிப்பு

பெரம்பலூர், பிப்.9 - நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் 21 வார்டு களை கொண்ட பெரம்பலூர் நகராட்சியில் 16 ஆவது வார்டு  வேட்பாளராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஏ.கலையரசி போட்டியிடுகிறார்.  செவ்வாயன்று 16 ஆவது வார்டு பகுதியில் வடக்கு காலனியில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, கூட்டணி கட்சி நிர்வாகிகள் 17 ஆவது வார்டு திமுக வேட்பா ளர் துரை.காமராஜ், கிளை செயலாளர்கள் ஜெயக்குமார், முத்துக்குமார், சிபிஎம் மாவட்ட செயலாளர் பி.ரமேஷ், கரும்பு விவசாயிகள் சங்கம் ஏ.கே.ராஜேந்திரன், திமுக, காங்கி ரஸ் உறுப்பினர்கள், மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு  உறுப்பினர்கள் எஸ்.அகஸ்டின், ரெங்கநாதன், கோகுல கிருஷ்ணன், ஒன்றிய செயலாளர் கருணாநிதி, நகரச் செயலா ளர் சிவானந்தம், சாலையோர வியாபாரிகள் சங்கம் ரெங்க ராஜ், வரதராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.