districts

img

பாவை பரஸ்பர சகாய நிதி லிட்டின் 11 ஆவது மகா சபைக் கூட்டம்

பாபநாசம், செப். 20-  தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் பாவை பரஸ்பர சகாய நிதி லிட்டின் 11 ஆவது மகா சபைக் கூட்டம் நடைபெற்றது.  கூட்டத்திற்கு தலைவர் அன்பழகன் தலைமை வகித்தார். மேலாண் இயக்குநர் அறிவொளி தணிக்கை அறிக்கையை வாசித்தார். இயக்குநர் கஸ்தூரி திலகம் வரவேற்றார். புதுக்கோட்டை நீ தான் அமைப்பின் கவிஞர் முருக பாரதி சிறப்புரையாற்றினார். பாபநாசம் பெனிபிட் பண்ட் லிட் தலைவர் ஆறுமுகம், சிட்டி யூனியன் வங்கி கிளை மேலாளர் தினேஷ், லயன்ஸ் கிளப் சாசனத் தலைவி தில்லை நாயகி, பாபநாசம் பேரூராட்சித் தலைவி பூங்குழலி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.  இதில் நீட் தேர்வெழுத உள்ள மாணவர்களுக்கு கையடுகள், பத்து, பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடம் பெற்ற மாணவிகளுக்கு ஊக்கப் பரிசு, உறுப்பினர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப் பட்டன. மாநில பகுத்தறிவாளர் கழக பொதுச் செயலாளர் மோகன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். இயக்குநர் மற்றும் கிளை மேலாளர் ரஞ்சித் குமார் நன்றி கூறினார்.