திருவாரூர்,ஜன.22- திருவாரூர் மாவட்ட ஆட்சியரக அலுவ லக கூட்டரங்கில் 2024 இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சித்தலைவர் -மாவட்ட தேர்தல் அலுவலர் தி.சாருஸ்ரீ வெளியிட்டார். சிறப்பு சுருக்க முறைத் திருத்தத்தின்படி 8,547 ஆண் வாக்காளர்கள், 11,400 பெண் வாக்காளர்கள், 3 இதர வாக்காளர்கள் என மொத்தம் 19,950 வாக்காளர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர். 6,998 ஆண் வாக்கா ளர்கள், 7,813 பெண் வாக்காளர்கள், 2 இதர வாக்காளர்கள் என மொத்தம் 14,813 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். தற்போது வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் 5,08,238 ஆண் வாக்காளர்கள், 5,33,105 பெண் வாக்களர்கள், 66 இதர வாக்காளர்கள் என மொத்தம் 10,41,409 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.இந்த இறுதி வாக்காளர் பட்டியல்கள் திருவாரூர் மற்றும் மன்னார்குடி வருவாய்க் கோட்ட அலுவலர் அலுவலகங்கள், திருவாரூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாட்சி யர் அலுவலகங்கள், நகராட்சி ஆணையர் அலுவலகங்கள், அனைத்து வாக்குச் சாவடி மையங்கள் ஆகியவற்றில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப் படும். வாக்காளர் பட்டியல்களை http:// elections.tn.gov.in என்ற வலைதளத் திலும் காணலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.