திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திண்டுக்கல் தொகுதி சிபிஎம் வேட்பாளர் ஆர்.சச்சிதானந்தம் திண்டுக்கல், நிலக்கோட்டை ஒன்றிய கிராமங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். கிராமங்கள் தோறும் அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.