districts

img

பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறைக்கு முடிவுகட்ட மாதர் சங்கத்துடன் இணைந்து மக்கள் களமிறங்க வேண்டும்

பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறைக்கு முடிவுகட்ட மாதர் சங்கத்துடன் இணைந்து மக்கள் களமிறங்க வேண்டும்

திண்டுக்கல்லில் ஜுன் 25,26 ஆகிய தேதி களில் ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநி லக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதனை யொட்டி திங்களன்று நாகல்நகரில் பெண்கள்,  குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை களுக்கு எதிராக பொதுக்கூட்டம் நடை பெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் அகில இந்திய துணைத்தலைவர் உ.வாசுகி, மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, மாநில துணைத் தலைவர் கே.பாலபாரதி, மாநில செயலாளர்  ஜி.ராணி, மாவட்டத்தலைவர் ஏ.சுமதி, மாவட்டச் செயலாளர் பாப்பாத்தி, பொருளாளர் பாண்டியம்மாள் உள்ளிட்டோர் பேசினர். 

உ.வாசுகி

பொதுக்கூட்டத்தில் உ.வாசுகி பேசியதாவது:  

இந்த காலக்கட்டத்தில் பரவலாக குழந்தை கள் வல்லுறவு செய்யப்பட்டுள்ள பல சம்பவங்கள் பதிவாகியுள்ளன. குழந்தைகள் அணிகிற உடை யாருக்கு மோசமான உணர்வை தூண்டுகிறது? ஒரு குழந்தையின் உடை அப்படியெல்லாம் உணர்வுகளை தூண்டிவிட முடியுமா? ஆனாலும் குழந்தைகள் மீதான பாலியல் வல்லுறவு நடந்துகொண்டே இருக்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் நிகழும் போதாவது, பெண்ணின் வன்முறைக்கு பெண்ணையே காரணம் காட்டுகிறவர்கள் யோசிக்க வேண்டாமா? இந்த சமூகம் திருந்த வேண்டாமா? பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டாமா? அதற்கு பதிலாக குற்றமிழைத்தவன் எப்பேர்ப்பட்டவனாக இருந்தாலும் என்ன மாதிரியான அரசியல் பின்புலம்  இருந்தாலும், எந்த சாதியைச் சேர்ந்தவராக இருந்தாலும், எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், ஒட்டுமொத்த சமூகமும் சேர்ந்து நின்று, நீ குற்றவாளி சிறைக்குச் செல்ல வேண்டியவன். காவல்துறை இவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்லும் போது தான், காவல்துறைக்கோ, அல்லது அரசு நிர்வாகத்திற்கோ ஒரு அழுத்தம் உண்டாகும். இந்த கொடுமைகளை தட்டிக்கேட்க மாதர் சங்கம் மட்டும் போதாது. எளிய மக்கள், ஆண்கள், பெண்கள் தட்டிக்கேட்க முன்வர வேண்டும். அப்போது தான் இந்த கொடுமைகளை தடுத்து நிறுத்த  முடியும். இவ்வாறு அவர் பேசினார். 

பாஜக போன்ற குழப்பவாதிகளிடம் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்

கே.பாலபாரதி பேச்சு

அதிமுக கள்ளச்சாராயத்திற்கு எதிராக போராட்டம் நடத்துகிறது. அடுப்பில் அரிசியைப் போட்டு பொங்கி அடுப்பிலேயே வழிவது போல அதிமுக இவ்வாறான போராட்டங்களை நடத்தி மக்களை திசை திருப்பப் பார்க்கிறது. 

கல்வராயன் மலை, ஜவ்வாது மலை பகுதிகளில் சாராயம் காய்ச்சுகிறார்கள் என்கிறார்கள். சாதாரணமாக யாராவது கொண்டு வந்துவிட முடியுமா? இப்போது கைது செய்யப்பட்டிருப்பவர்கள், விற்பனையில் ஈடுபட்ட வியாபாரிகள். இதை உருவாக்குபவர்கள் யார் என்று தமிழக அரசு கண்டறிய வேண்டும். இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டும் போதாது. சமூக அக்கறையோடு விழிப்புணர்வை ஏற்படுத்த அரசு முயற்சிக்க வேண்டும். கள்ளச்சாராய ஒழிப்பில் காவல்துறையின் ஒரு பிரிவு செயல் இழந்து கிடக்கிறது என்பதை உணர வேண்டும். டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக ஏராளமான போராட்டங்களை மாதர் சங்கம் நடத்தியிருக்கிறது. 

நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவை மக்கள் எந்த இடத்தில் வைத்திருக்கிறார்கள் என்பதை அதிமுகவினர் யோசிக்க வேண்டாமா? பாஜக அண்ணாமலை போட்டியிட்ட தொகுதியில் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். அதையே தங்களுடைய பெரிய வெற்றி என்று அவர்களாகவே சமாதானம் செய்து கொள்கிறார்கள். இவ்வாறான குழப்பவாதிகள் தமிழ்நாட்டில் உருவாகி அலைந்து கொண்டிருக்கிறார்கள். மக்களையும் குழப்பிக்கொண்டே இருக்கிறார்கள். மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

அரியலூர் பாலியல் வழக்கில் மேல்முறையீடு செய்திடுக!

எஸ்.வாலண்டினா

“நிர்பயா வழக்கையடுத்து பெண்களின் பாதுகாப்பிற்காக ஒன்றிய அரசு 1000 கோடி ரூபாய் அறிவித்தது. ஆனால் அந்த நிதியை எந்த மாநில அரசும் பயன்படுத்தவில்லை. 4 வயது குழந்தை முதல் 18 வயது குழந்தை வரை பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகி வருகிறார்கள். 

அரியலூரில் ஒரு சிறுமியை ஒருவன் காதலிப்பதாகக் கூறி ஏமாற்றுகிறான். திரு மணம் செய்ய அழைத்த போது 4 நண்பர்களு டன் சேர்ந்து பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். கிட்டத்தட்ட 16 நாட்களாக அந்த சிறுமி எங்கே இருக்கிறார் என்று காவல்துறையினரால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு கிணற்றில் அழுகிய நிலையில் அந்த சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. 6 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற இந்த சம்பவத்தில் முதல் குரல் கொடுத்து போராடியது மாதர் சங்கம் தான். பிறகு இந்த வழக்கில் முதன்மை குற்றவாளிக்கு 34 ஆண்டுகாலம் சிறை தண்டனை கிடைத்திருக்கிறது என்று சொன்னால் மாதர் சங்கத்தின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும். இந்த வழக்கில் மற்ற 4 குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். அந்த குற்றவாளிகளுக்கு எதிராக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும்” என்று மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா கூறினார்.

;