districts

img

தேனி, திண்டுக்கல்லில் அரசு ஊழியர்கள் பிரச்சாரம்

திண்டுக்கல், ஜுன் 23- பழைய பென்சன் திட்டம் தொடர வேண்டும். அரசு துறையில் நாலரை லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டுக் கல் மாவட்டத்தில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பாக ஊழியர் சந்திப்பு பிரச்  சார இயக்கம் நடைபெற்றது. வியாழ னன்று காலை 8 மணிக்கு திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனை முன்பிருந்து பிரச்சாரம் துவக் கப்பட்டது.  மாநில பொதுச்செயலாளர் செல்வம், மாநில துணைத்தலைவர் செல்வராணி, மாநில செயலாளர்  அண்ணாகுபேரன், மாவட்டத்தலைவர் எஸ்.முபாரக் அலி, மாவட்டச்செயலா ளர் விவேகானந்தன், பொருளாளர் குப்பு சாமி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தேனி 
கடந்த தேர்தலின் பொது திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை தமி ழக முதல்வர் நிறைவேற்ற வலியுறுத்தி தேனியில் அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் தீவிர பிரச்சாரம் நடைபெற்றது .. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ,ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் ,நக ராட்சி அலுவலகங்கள் ,அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட அலுவலகங்களில் பிரச்சாரம் மாவட்ட தலைவர் பி.பேயத்தேவன் தலை மையில் நடைபெற்றது . மாநில துணை  பொதுச் செயலாளர் சீனிவாசன் ,மாநில துணைத் தலைவர் பரமேஸ்வரி ,மாவட்ட செயலாளர் தாஜுதீன் ,மாவட்ட நிர்வாகி கள் பொ.அழகுராஜா, முத்தையா உள்  ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

;