1.திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் மதுரை தொகுதி சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசன் வெள்ளியன்று மதுரை வடக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார். வீதிகள் தோறும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பல இடங்களில் பெண்கள், சு.வெங்கடேசன் மீது மலர் தூவி வரவேற்றனர்.
2.திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திண்டுக்கல் தொகுதி சிபிஎம் வேட்பாளர் ஆர்.சச்சிதானந்தம் வெள்ளியன்று பழனி, நெய்க்காரப்பட்டி மற்றும் திண்டுக்கல் பேகம்பூரில் வாக்கு சேகரிப்பு பிரச்சாரம் மேற்கொண்டார். பல்வேறு இடங்களில் பெண்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.