districts

வலங்கைமான் பங்குனி திருவிழா :  சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தஞ்சாவூர், மார்ச்.25- திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் மாரியம்மன் கோவில் பங்குனி பெருந்திருவிழா மார்ச் 27 ஞாயிற்றுக்கிழமை அன்றும், பல்லக்கு திருவிழா ஏப்.3 ஞாயிற்றுக்கிழமை அன்றும் நடைபெற உள்ளது.  இதை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிட் மார்ச் 26 முதல் 28 ஆம் தேதி வரையும், ஏப்.2 முதல் 4 ஆம் தேதி வரையும் வலங்கைமானுக்கு, விழாப் பேருந்துகளை இரவு, பகல் முழுவதும், கும்பகோணம் - வலங்கைமான், நீடாமங்கலம் - வலங்கைமான், குடவாசல் - வலங்கைமான், பாபநாசம் - வலங்கைமான், தஞ்சாவூர் - வலங்கைமான், மன்னார்குடி - வலங்கைமான் ஆகிய வழித்தடங்களில் இயக்க உள்ளது.