கும்பகோணம், ஜூலை 22 - கும்பகோணம் அருகே திருவ லஞ்சுழியில் வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற பல கோடி ரூபாய் மதிப்பி லான சாமி சிலைகளை போலீசார் பறி முதல் செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோ ணம் அருகே உள்ள திருவலஞ்சுழியில் ‘ஸ்ரீதர்சன் ஆர்ட் மெட்டல்ஸ்’ என்ற சிலை தயாரிப்பு நிறுவனத்தில் (சிலை செய்யும் பட்டறை) பழங்கால சாமி சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டு உள்ள தாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீ சாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மேலும் இந்த சிலைகளை தென்னாப் பிரிக்காவில் உள்ள சிசோன்கே என்ற தனியார் நிறுவனத்துக்கு விற்பனை செய்ய ஒப்பந்தம் செய்து இருப்பதும் கண்டறியப்பட்டது. இதைத் தொ டர்ந்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறை ஐ.ஜி. ஜெயந்த்முரளி, காவல் கண்காணிப்பாளர் ராமலிங்கம், ரவி ஆகியோர் உத்தரவின் பேரில், துணை காவல் கண்காணிப்பாளர் கதிரவன் மற்றும் போலீசார் ‘ஸ்ரீதர்சன் ஆர்ட் மெட்டல்ஸ்’ நிறுவனத்தில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கிருஷ்ணர், திருவாச்சியுடன் கூடிய விநாயகர், திருக்கடையூர் நடராஜர், சிவகாமி அம்மன், அர்த்தநாரீஸ்வரர், வல்லப கணபதியுடன் அம்மன் என பழங்கால சாமி சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த சிலைகளை போலீசார் பறிமுதல் செய்த னர். மேலும், நிறுவன உரிமையாளரான ராமலிங்கத்தையும் (60) போலீசார் கைது செய்தனர். இச்சோதனையில் சில ஆவணங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அதில் ஒரு ஆவணத்தில், கடந்த 2015 ஆம் ஆண்டு ராமலிங்கம், சிலைகளை வெளிநாடுகளுக்கு அனுப்ப மத்திய தொல்லியல் துறையை அணுகியதும், இந்த சிலைகள் பழமையானவை என அறிந்து தொல்லியல்துறை அதிகாரி கள் சந்தேகத்தின் பேரில், அவரின் விண்ணப்பத்தை நிராகரித்ததும் தெரிய வந்தது. ராமலிங்கத்திடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளின் மதிப்பு சர்வ தேச சந்தையில் பல கோடி ரூபாய் இருக்கும் என சிலை கடத்தல் தடுப்பு மற்றும் மீட்பு பிரிவு போலீசார் தெரிவித்த னர். இந்த சிலைகள் ராமலிங்கத்தின் பட்டறைக்கு எங்கிருந்து கொண்டு வரப்பட்டது? என அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.