districts

img

விவசாயிகளை வஞ்சிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து டிராக்டர் பேரணி

தஞ்சாவூர், ஜன.27 -  விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்கான சட்ட உத்தரவாதம் அளிக்க வேண்டும். மின்சார சட்டத்திருத்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும். தில்லி போராட்டத்தில் உயிர் நீத்த 714 பேருக்கு நினைவிடம் அமைக்க வேண்டும். அவர்களது குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.  தில்லியில் போராடிய விவசாயிகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும். லக்கீம்பூர்கெரி விவசாயி கள் படுகொலைக்கு காரணமான ஒன்றிய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் தில்லியில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில், அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற மறுக்கும், மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்தும் நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஜனவரி 26 அன்று டிராக்டர் பேரணி நடைபெற்றது. தஞ்சையில் நடைபெற்ற பேரணிக்கு, ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்.வி.கண்ணன் தலைமை வகித்தார். பேரணியை, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் டில்லி பாபு தொடங்கி வைத்தார்.  சிபிஎம் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், சிபிஐ மாவட்டச் செயலாளர் முத்து.உத்திராபதி, திக பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், விசிக மைய மாவட்டச் செயலாளர் சொக்கா ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருவாரூர் 
. திருவாரூர் புதிய பேருந்து நிலையத்தி லிருந்து துவங்கி புதிய ரயில் நிலையம் வரை நடைபெற்ற டிராக்டர் பேரணிக்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி (சிபிஐ) தலைமை வகித்தார். தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் சாமி நடராஜன் (சிபிஎம்) முன்னிலை வகித்தார். நாகை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.செல்வராஜ் துவக்கி வைத்தார். திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் கே.மாரிமுத்து மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் ஒருங்கி ணைப்பு குழு தலைவர்கள் கலந்து கொண்டனர்
மயிலாடுதுறை 
மயிலாடுதுறை காவிரி நகர் அண்ணா  மேம்பாலத்திலிருந்து மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் எஸ்.துரைராஜ் பேரணியை துவக்கி வைத்தார். சிபிஎம் மாவட்டச் செயலா ளர் பி.சீனிவாசன் வாழ்த்தி பேசினார்.  தரங்கம்பாடி, மயிலாடுதுறை, சீர்காழி, செம்பனார்கோவில், கொள்ளிடம், குத்தா லம் பகுதிகளிலிருந்து 100-க்கும் அதிகமான டிராக்டர்களுடன் விவசாயிகள் கலந்து கொண்டனர்.  பேரணியை தடுக்கும் விதமாக காவல் துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் விவசாயிகளின் ஒற்றுமை மிகுந்த ஏற்பாட்டால், வேறு வழியின்றி அனு மதியளித்து காவல்துறையினர் பாதுகாப்பு அளித்தது குறிப்பிடத்தக்கது.
திருச்சிராப்பள்ளி
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் துவங்கிய பேரணிக்கு ஐக்கிய விவசாயி கள் முன்னணியின் திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அயிலை சிவசூரியன் தலைமை வகித்தார். சிபிஎம் திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் எம்.ஜெயசீலன் துவக்கி வைத்தார். இதில் தமிழ்நாடு விவ சாயிகள் சங்க திருச்சி மாவட்டத் தலை வர்கள் ஆர்.நடராஜன், சிதம்பரம், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர்கள் அ.பழநிசாமி, தங்க துரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலிருந்து தொடங்கிய பேரணி பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது. பேரணிக்கு விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் வரப்பிரசாதம் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் மணிவேல், மாவட்டத் தலைவர் செந்தில்நாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;