districts

கொப்பரைத் தேங்காய்க்கு கிலோ ரூ.140 நிர்ணயம் செய்திடுக! தென்னை விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை

தஞ்சாவூர், ஜூன் 25-  கொப்பரை தேங்காய்க்கு கிலோ ரூ.140 என நிர்ணயம் செய்ய வேண்டும் என தென்னை விவசாயிகள் சங்கம் தமிழக அரசுக்கு  கோரிக்கை விடுத்துள்ளது.  தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தஞ்சாவூர்  மாவட்ட அமைப்பு பேரவை, பேராவூரணி எம்.எஸ் விழா அரங்கில் வெள்ளிக்கிழமை நடை பெற்றது. தென்னை விவசாயிகள் சங்க  மாவட்ட அமைப்பாளர் எம்.செல்வம் தலைமை வகித்தார். கடைமடை விவசாயிகள் அமைப்பு நவீன் ஆனந்த் வரவேற்றார்.  இதில், தென்னை விவசாயிகள் சங்க மாநில  அமைப்பாளர் ஏ.விஜயமுருகன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன், மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.வாசு ஆகி யோர் பேசினர்.  மாவட்டத் தலைவராக எம்.செல்வம், மாவட்டச் செயலாளராக ஆர்.எஸ்.வேலுச் சாமி, பொருளாளராக அரங்கசாமி, துணைத் தலைவர்களாக நவீன் ஆனந்தன், கே.ஆர்.டி.கருப்பையா, துணைச் செயலாளர்களாக என்.சுரேஷ்குமார், பிரபாகரன் உள்ளிட்ட 18  பேர் கொண்ட மாவட்டக் குழு அமைக்கப் பட்டது.  கூட்டத்தில், “கொப்பரை தேங்காய் கிலோ  ஒன்றுக்கு ரூ.140, பச்சைத் தேங்காய் கிலோ ஒன்றுக்கு ரூ.50 என விலை நிர்ணயம் செய்ய  வேண்டும். வேளாண்மை கூட்டுறவு வங்கிகள்  மூலம் கொப்பரைத் தேங்காய் கொள்முதல் தொடங்கி, உடனடியாக பணம் வழங்க வேண்டும். தென்னை வளர்ச்சி வாரியத்தை மீண்டும் தென்னை சாகுபடி பகுதிகளுக்கு மாற்ற வேண்டும். தென்னை மரங்களுக்கு நிவாரணம் கிடைக்கும் வகையில் இன்சூ ரன்ஸ் வழங்க வேண்டும். தென்னை நார்  மற்றும் கழிவுநார் தொழிலுக்கு தமிழ்நாட்டில்  பசுமை சான்றிதழ் வழங்க வேண்டும். ரேசன்  கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க  நடவடிக்கை எடுக்க வேண்டும். தேங்காய்  உற்பத்திக்கான இடுபொருள் மானியத்தை  மீண்டும் வழங்க வேண்டும்” என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

;