கும்பகோணம், மே 28 - கும்பகோணத்தில் சாதி ஆணவ படுகொ லையைத் தடுக்க தனி சிறப்பு சட்டம் இயற்ற கோரி தீண்டாமை ஒழிப்பு முன்னணி, ஜனநா யக முற்போக்கு இயக்கங்கள் சார்பில் கும்ப கோணம் காந்தி பூங்கா முன்பு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணைச் செயலா ளர் சின்னை.பாண்டியன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விடுதலை சிறுத்தைகள் கட்சி, திராவிடர் கழகம், விடுதலை தமிழ் புலிகள் கட்சி, தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம், நீலப்புலிகள் இயக்கம், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், இந்திய குடியரசு கட்சி, மக்கள் ஜனநாயக குடியரசு கட்சி, தலித் கிறிஸ்துவ நல சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் சார்பில் தமிழகத்தில் நடைபெறும் சாதி ஆணவ படுகொலைகளை தடுக்க தமிழக அரசு தனிச் சிறப்பு சட்டம் இயற்றக் கோரி கண்டன முழக்கங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி பொறுப்பாளர்கள் சிவகுரு, அபி மன்யு, கலைச்செல்வி, கும்பகோணம் மாநகர செயலாளர் பழ.அன்புமணி, விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட பொறுப்பாளர் உற வுழகன், மண்டல செயலாளர் விவேகானந் தன், தொகுதி செயலாளர் முல்லைவளவன், கருத்தியல் பரப்புரை மாநில செயலாளர் அர சாங்கம், திராவிட கழக மாவட்ட தலைவர் நிம்மதி, விடுதலை தமிழ் புலிகள் கட்சி மாநில பொதுச்செயலாளர் சுரேஷ், இளைஞரணி மாநில துணைச் செயலாளர் விஜய்ஆனந்த், அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளர் சங்கம் சசிகுமார், வழக்கறிஞர் ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் . இறுதியாக கும்பகோணம் கோட்டாட்சி யரை சந்தித்து சாதி ஆணவ படுகொலை களை தடுக்க தனி சிறப்பு சட்டம் இயற்றக் கோரி மனுக்கள் வழங்கப்பட்டன.