districts

img

தஞ்சாவூர் 36 ஆவது வார்டு சிபிஎம் வேட்பாளர் வாக்குச் சேகரிப்பு

தஞ்சாவூர், பிப்.17- தஞ்சாவூர் மாநகராட்சி 36 ஆவது வார்டில், திமுக தலை மையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில், சிபிஎம் வேட்பாளர் இ.வசந்தி போட்டியிடுகிறார். வாக்குச் சேகரிப்பின் நிறைவு நாளான வியாழ னன்று, தஞ்சாவூர் பூக்கார வடக்குத் தெருவில் வேட்பா ளர் இ.வசந்தி வீடு, வீடாகச் சென்று துண்டுப் பிரசுரங் கள் வழங்கி வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அவருடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டி யன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.கலைச் செல்வி, மாவட்டக் குழு உறுப் பினர்கள் சாமி.நடராஜன், என்.குருசாமி, என்.சரவ ணன், ஜி.அரவிந்தசாமி, தஞ்சாவூர் ஒன்றியச் செய லாளர் கே.அபிமன்னன், மாணவர் சங்க மாவட்டத் தலைவர் அர்ஜூன், கிளைச் செயலாளர்கள் எம்.எஸ்.ராஜா, கருணாநிதி, மாநகரக் குழு உறுப்பினர்கள் வின்சிலா, பைந்தமிழ், கோஸ்கனி, ராஜன், அன்பு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

;