districts

img

தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கழிவறையில் இறந்த நிலையில் பெண் சிசு

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள கழிவறையில், பிறந்து சில மணிநேரமே ஆன பெண் குழந்தை ஒன்று தொப்புள் கொடிகூட அகற்றப்படாத நிலையில், வெஸ்டர்ன் டாய்லெட் ஃப்ளஷ் தண்ணீர் தொட்டியில் மூழ்கிய நிலையில் இறந்து கிடந்தது.

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், ஐ.சி.யூ., பிரிவில், சனிக்கிழமை காலை கழிவறையை சுத்தம் செய்ய, துப்புரவு பணியாளர்கள் சென்றுள்ளனர். அப்போது, அங்குள்ள வெஸ்டர்ன் டாய்லெட் ஃப்ளஷ் தண்ணீர் தொட்டியை திறந்த போது, தொப்புள்கொடி கூட அகற்றப்படாமல் மூழ்கிய நிலையில், பிறந்த பெண் குழந்தை, இறந்த கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
 
அவர்கள் அங்கு பணியில் இருந்த டாக்டர்களுக்கு தகவல் அளித்தனர். அவர்கள் மருத்துவக்கல்லுாரி முதல்வர் ரவிக்குமார் மற்றும் மருத்துவக்கல்லூரி காவல்துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் குழந்தையின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவ சிகிச்சைக்கான வார்டு கிடையாது. ராசா மிராசுதார் அரசு ஆஸ்பத்திரியில் மட்டுமே பிரசவவார்டு, குழந்தைகளுக்கான சிகிச்சை பகுதி செயல்பட்டு வருகிறது.

அப்படி உள்ள நிலையில், பிறந்த பச்சிளம் குழந்தை எப்படி வந்தது? மருத்துவமனைக்கு வெளியே பிறந்த குழந்தையை இங்கு கொண்டு வந்து போட்டனரா?  என்பதை அங்குள்ள சி.சி.டி.வி., கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் வெள்ளிக்கிழமை இரவு 8:22 மணிக்கு கழிவறை பகுதியில் ஒரு பெண் மற்றும் அந்த பெண்ணுடன் முதியவர் ஒருவரும் செல்லும் பதிவான செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது. 

;