districts

கைத்தறி நெசவாளர்களுக்கு நிறுத்தப்பட்ட மருத்துவ காப்பீட்டை மீண்டும் அமல்படுத்துக! மாநிலங்களவை உறுப்பினரிடம் மனு

கும்பகோணம், அக்.12- தஞ்சாவூர் மாவட்ட பட்டு நூல் கைத்தறி நெசவு தொழிலாளர் சங்கம்  சார்பில் நெசவாளர்களுக்கு வழங்கப் பட்டு வந்த மருத்துவ காப்பீட்டு திட்டத்தை  திரும்ப வழங்க வலியுறுத்தி, கும்ப கோணத்தில் மாநிலங்களவை உறுப்பி னர்கள் கல்யாணசுந்தரம், சண்முகம் ஆகியோரிடம் சங்கத் தலைவர் கே. ஆர்.சந்திரன், செயலாளர் சுப்ரமணி யன் குமார் ஆகியோர் மனுக்கள் வழங்கினர்.  அம்மனுவில், “தமிழ்நாட்டில் 4  லட்சம் கைத்தறி மற்றும் காதி நெசவா ளர்கள் குடும்பங்கள் உள்ளனர். அவர்கள் குடும்பத்தை சேர்ந்த 15 லட்சம்  பேர் போதிய வருமானம் இன்றியும், மருத்துவ வசதிகள் இன்றியும் அல்லல் பட்டு வருகின்றனர். கடந்த ஆட்சியில் நெசவாளர் களுக்கு இந்திய அரசும், ஐசிஐசிஐ  நிறுவனமும் இணைந்து ஆண்டுக்கு ரூ.15,000-க்கு மருத்துவ காப்பீடு வழங்கி வந்தனர். இதில் உள்நோயா ளிகளுக்கு ரூ.7500, வெளிநோயா ளிகளுக்கு ரூ.7500 வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் யுனைடெடட் இந்தியா இன்சூரன்ஸ் என்ற நிறுவ னத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம் போடப்பட்டு ஆண்டுக்கு ரூ.50,000 மருத்துவ காப்பீடு என்று அறிவிக்கப் பட்டது.  ஆனால் அந்த மருத்துவ காப்பீடு திட்டம் சரியான வழிகாட்டுதலும் மருத்துவர்களும் இல்லாமல் முடங்கிப் போய் உள்ளது. இந்நிலையில் இத்திட்டம் வேறு பெயரில் வந்தாலும் நெசவாளர்களுக்கு எந்தப் பலனும் இல்லை. எனவே நெசவாளர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் வரையில் மருத்துவ காப்பீடு தொடங்க வேண்டும். இந்தி யாவில் உள்ள நிறுவனங்களில் ஒப்பந்தம் செய்து மருத்துவ நிவாரணம் வழங்க  ஒன்றிய அரசை வலியுறுத்த வேண்டும். மகாத்மா காந்தி புங்கர் பீமா யோ ஜனா திட்டத்தின் கீழ் 60 வயதிற்கு  முன்பு ஒரு நெசவாளர் இறந்துவிட் டால், ஒன்றிய அரசும் ஆயுள் காப்பீட்டு  நிறுவனமும் இணைந்து ரூ.60,000-ஐ அவரது வாரிசுகளுக்கு வழங்கப்பட்டு வந்தது. அந்தத் திட்டம் தற்போது, பிரத மர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பின்னர், எஸ்பிஐ-யுடன் இணைந்து புதிய ஒப்பந்தம் செய்து, ஒரு நெசவா ளர் 50 வயதுக்கு முன்பு இறந்தால் ரூ.2  லட்சம் வழங்குவதாக அறிவிப்பு வெளி யானது. ஆனால் இதுவரை கடந்த நான்கு  ஆண்டுகளாக மனுக்கள் அனுப்பப்பட் டும், இந்தப் புதிய ஒப்பந்தப்படி எந்த நிவாரணமும் வழங்கப்படவில்லை. தகவல் உரிமைச் சட்டத்தின் மூலம்  அந்த திட்டம் அதே பெயரில் தொடர் கிறது என்று அறிவிக்கப்பட்டது. எனவே  தாங்கள் இந்த விஷயத்தில் தலையிட்டு, 60 வயதிற்கு முன்பு இறக்கும் அனைத்து நெசவாளர்களுக்கும் ரூபாய் ஒரு லட்சம் வழங்க ஆவன செய்யுமாறு ஒன்றிய அரசை வலியு றுத்த வேண்டும்” என தெரிவிக்கப் பட்டுள்ளது.

;