districts

img

கும்பகோணத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் விரைவில் அமலுக்கு வரும்: எம்எல்ஏ தகவல்

கும்பகோணம், ஜூலை 24 - கும்பகோணம் மாநகராட்சிக்கு ரூ.1100 கோடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் பெற தேவை யான நடவடிக்கை எடுக்கப்பட்டு விரைவில் செயலுக்கு வரும் என கும்பகோணம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் கூறினார். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மகாமக குளத்தில் நகரங்களுக்கான தூய்மை  இயக்கத்தின் சார்பில் மாநகராட்சி தூய்மை  பணியாளர்கள் ஒருங்கிணைந்த தூய்மைப்  பணியை எம்எல்ஏ அன்பழகன் கொடிய சைத்து துவக்கி வைத்தார். இப்பணிக்கு கும்பகோணம் மாநகராட்சி மேயர் சர வணன் தலைமை வகித்தார். தூய்மை இப்பணியில் 50-க்கும் மேற்பட்ட மாநக ராட்சி ஊழியர்கள், மகாமக குளத்தின் நான்கு  கரைகளிலும் கிடந்த குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தனர்.  நிகழ்ச்சிக்கு பின்னர் கும்பகோணம் எம்எல்ஏ அன்பழகன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “சுற்றுலா பயணிகளை கவரும் இடமாகவும், ஆன்மீக சின்னமாக வும் கும்பகோணம் மகாமக குளம் விளங்கு கிறது. இதில் படகு சவாரி தயார் நிலையில் இருந்தாலும், ஆன்மீக விதிகளின்படி அது ஏற்புடையதாக இல்லை என்பதால் படகு சவாரி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒன்றிய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கும்பகோணத்திற்கு ரூ.1100  கோடி மதிப்பில் கும்பகோணம் மாநகர திட்ட வரைவு தயார் செய்யப்பட்டு, செயல்திட்டம் அமலுக்கு வர உள்ளது. தற்போதைய சூழலில் மாவட்ட தலைமை நகரங்களுக்கு மட்டும் ஸ்மார்ட் சிட்டி திட்டம் முன்னுரிமை அளிப்பதால், கும்பகோணத்திற்கு இத்திட் டம் தாமதமாகி வருகிறது.  கும்பகோணத்தை மாவட்ட தலைநக ராக அறிவிப்பதற்கு பொருளாதார சூழல் மட்டுமே தடையாக உள்ளது. இதை முதல மைச்சர் ஸ்டாலின் விரைவில் சரி செய்ய உள்ளார். அதன் பிறகு கும்பகோணத்தை தனி  மாவட்டமாக அறிவிப்பது உறுதி. இதனைத் தொடர்ந்து ரூ.1100 கோடி திட்டத்தில் கும்ப கோணம் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி  திட்டம் செயலுக்கு வரும். அதன் பிறகு புது  பொலிவுபெற்று முன்னணி மாநகரங்களில் ஒன்றாக கும்பகோணம் திகழும் என்றார்.

;