districts

img

ஒன்றிய அரசு எல்ஐசி நிறுவனத்தின் பங்குகளை விற்பது தொழிலாளர்களுக்கு செய்யும் துரோகம் எஸ்.எஸ்.பழநி மாணிக்கம் பேச்சு

தஞ்சாவூர், மார்ச் 6- மோடி தலைமையிலான ஒன்றிய அரசு எல்.ஐ.சி. பங்கு களை விற்பது தொழிலாளர்க ளுக்குச் செய்யும் துரோகம் என முன்னாள் ஒன்றிய நிதித்துறை இணை அமைச்சரும், தஞ்சாவூர் தொகுதி மக்களவை உறுப்பி னருமான எஸ்.எஸ்.பழநிமாணிக் கம் தெரிவித்தார்.  தஞ்சாவூர் தலைமை அஞ்சல கம் எதிரில், எல்.ஐ.சி.பங்கு விற்ப னையை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி, தஞ்சை கோட்ட காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம் எதிராக சனிக் கிழமை மாலை பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  போராட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றிய தஞ்சாவூர் தொகுதி மக்களவை உறுப்பினர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் பேசி யதாவது: பாஜக அரசு பொறுப்பேற்று 7 ஆண்டுகளாகின்றன. இத் தனை ஆண்டுகளில் வெகுஜன நிறுவனங்களைத் தனியார்மய மாக்குவதைத் தலையாய பணி யாகக் கொண்டுள்ளது. எல்.ஐ.சி. பற்றிய புரிதல் பாலிசிதாரர்களிடமே அதிகமாக இருக்கிறது. இந்த நாட்டின் கட்ட மைப்புக்கு மிகப் பெரும் தூணாக எல்.ஐ.சி. இருக்கிறது. அரசின் அவரச தேவைகளுக்கு நிதி  வழங்குகிற அட்சயப் பாத்திரமாக இருப்பது எல்.ஐ.சி.தான். எல்.ஐ.சி. நிறுவனத்துக்கு ஈடு இணையான நிறுவனம் வேறு எதுவும் இல்லை. இந்நிலையில், இதைத் தனியார்மயமாக்குவது தொழிலாளர்களுக்குச் செய்யக் கூடிய துரோகச் செயல். பாஜக அரசுக்கு பரந்த ஞானம் இல்லை. எல்லாவற்றையும் ஒரே மாதிரி யாகத்தான் பார்க்கின்றனர்.

நட்டம் வரும்போது அந்த நிறு வனத்தை விற்பதில்தான் உள்ள னர்.  பொதுத் துறை நிறுவனங்க ளின் சீரழிவுக்கு அதன் செயல் பாடுகளும், தொழிலாளர்களும் காரணமல்ல. நிர்வாகக் குறை பாட்டால்தான் பொதுத் துறை நிறு வனங்கள் சீரழிகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.  காப்பீட்டு ஊழியர் சங்கத்தின் தஞ்சாவூர் கோட்டத் தலைவர் எஸ். செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்  டத்தில், தென் மண்டல காப்பீட்டு ஊழியர் சம்மேளன துணைத் தலைவர் கே.சுவாமிநாதன், சிபிஎம் மாநிலச் செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் இராம லிங்கம், மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், கல்வி யாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, சங்கத்தின் கோட்டப் பொதுச் செயலர் வி.சேதுராமன், இணைச் செயலர் பி.சரவண பாஸ்கர், லிகாய் முகவர் சங்க  மாநில செயல் தலைவர் பூவலிங் கம், அகில இந்திய வங்கி ஊழி யர்கள் சங்கம் அன்பழகன் மற்றும் ஊழியர்கள், முகவர்கள் உள் ளிட்ட 300 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

;