districts

செப்.16, 17 தஞ்சையில் தொழில்நுட்ப பொருட்காட்சி உணவு, தொழில்நுட்பம், மேலாண்மை நிறுவனம் நடத்துகிறது

தஞ்சாவூர், செப்.14 - தஞ்சாவூரில் உள்ள உணவு, தொழில் நுட்பம், தொழில் மேம்பாடு மற்றும் மேலாண்மை நிறுவனம் சார்பில் செப். 16,17 (வெள்ளி, சனி) ஆகிய இரு நாட்க ளில் சிறுதானிய உணவு அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் நவீன பத னிடும் செயல்விளக்க முறைகள் தொ டர்பாக பொருட்காட்சியும், செயல் விளக்க ஆலோசனைகளும் நடைபெறு கிறது என நிறுவனத்தின் இயக்குநர் (பொறுப்பு) எம்.லோகநாதன் தெரி வித்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் எம்.லோகநாதன் கூறியதாவது:  “இந்திய அரசின் உணவு பதப்படுத் தும் தொழில்கள் அமைச்சகத்தின் கீழ், தஞ்சாவூரில் இயங்கி வரும் தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் மேலாண்மை நிறுவ னத்தின் சார்பில் முன்னோடி ஆராய்ச்சி யும், உயர் கல்வியும் அளிக்கப்பட்டு வரு கிறது. உணவு பதப்படுத்துதல் சார்பாக  ஆராய்ச்சி மற்றும் கல்வி அளிப்ப தோடு மட்டுமல்லாமல், விவசாயிகள்,  தொழில் முனைவோர், இளைஞர் களுக்கு உணவு பதப்படுத்துதல் சார்ந்த  தொழில் மேற்கொள்ள பயிற்சிகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கி வரு கிறது.

இந்நிறுவனம் விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற பெண் களை உணவுத்தொழில் முனைவோ ராக மாற்றியுள்ளது. இந்நிறுவனத்தின் முன்னாள் இயக் குநர் டாக்டர் வி.சுப்ரமணியனின், 120  ஆவது ஆண்டு பிறந்தநாளை நினைவு  கூறும் வகையில், செப்டம்பர் 16, 17 ஆம் தேதிகளில் தஞ்சாவூரில் நிறு வன வளாகத்தில் உணவு தொழில் நுட்ப பொருட்காட்சி நடத்தப்படவுள்ளது.  இப்பொருட்காட்சி செப்.16 அன்று  பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக வும், செப்.17 அன்று விவசாயிகள், தொழில் முனைவோர், மகளிர் குழுக்கள்,  பொது மக்களுக்காகவும் நடத்த திட்ட மிடப்பட்டுள்ளது. இந்த பொருட்காட்சியானது, “சிறு தானிய உணவு அறிவியல், தொழில் நுட்பம் மற்றும் நவீன பதனிடும் முறை கள்” என்ற கருப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேசத்தின் வளர்ச்சிக்கு உணவு பதப்படுத்தும் துறை யின் பங்களிப்பு மற்றும் உணவு பாது காப்பு மற்றும் சுகாதார நடைமுறை களின் முக்கியத்துவம் குறித்து பொது மக்களுக்கு விளக்கமளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பொருட்காட்சி இரு நாட் களும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி  வரை நடைபெறவுள்ளது. இந்நாட் களில் இந்நிறுவனத்தால் உருவாக்கப் பட்ட வெற்றிகரமான கண்டுபிடிப்பு கள், தொழில்நுட்பங்கள், இயந்திரங்க ளின் செயல்விளக்கங்கள் இடம் பெற வுள்ளன.  மேலும், இந்நிறுவனத்தில் பயிற்சி பெற்று தொழில் முனைவோ ராக மாறியவர்களின் உற்பத்தி பொருட் கள் அடங்கிய கண்காட்சியும் இடம் பெற வுள்ளது” என்றார்.

;