districts

விதை உளுந்து கொள்முதல்: விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

பாபநாசம், மே 17 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வேளாண் உதவி  இயக்குநர் சுஜாதா விடுத் துள்ள செய்திக் குறிப்பில், பாபநாசத்தில் தற்போது பரவலாக சாகுபடி செய் யப்பட்டுள்ள சித்திரைப் பட்ட உளுந்து சாகுபடி விதைப் பண்ணைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆடு துறை 5, வம்பன் 8 ஆகிய ரகங்கள் விவசாயிகளால் விரும்பி சாகுபடி செய்யப் பட்டுள்ளன.  எதிர்வரும் கார்த்திகை, மார்கழி, தை பட்டங்களில் விதைப்பதற்கு ஏற்ற சான்று பெற்ற உளுந்து விதை களை உற்பத்தி செய்து, விவ சாயிகளுக்கு வழங்கிட ஏதுவாக, தற்போது சித்தி ரைப் பட்டத்தில் பாபநாசம் வட்டாரத்தில் 250 ஏக்கர் உளுந்து விதைப்பண்ணை அமைத்து உளுந்து விதை கொள்முதல் செய்யப்பட உள்ளது. வேளாண்மை துறை நிர்ணயித்துள்ள கிலோ விற்கு ரூ.83 என்ற விலை யில் விதை உளுந்து விவ சாயிகளிடமிருந்து கொள்முதல்  செய்யப்படும். எனவே ஆடுதுறை 5,  வம்பன் 8 ஆகிய உளுந்து ரகங்களை, நல்ல நிலைமை யில் உள்ள வயல்களில் சாகு படி செய்துவரும் விவசாயி கள், வேளாண் துறை மூலம்  விதைப் பண்ணை அமைத்து  பயன்பெற வேண்டும் என  கூறப்பட்டுள்ளது.

;