districts

img

குடியரசு தின விழா கொண்டாட்டம்

தேனி, ஜன. 26:  தேனியில் குடியரசு தின விழாவை யொட்டி ஜனவரி 26 வியாழக்கிழமை தேசியக் கொடியை ஏற்றி வைத்த மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளீதரன், அரசுத் துறைறகளில் சிறறப்பாக பணியாற்றிய 275 அலுவலர்கள், பணியாளர்களுக்கு பதக்கம் வழங்கினார். தேனி மாவட்ட விளையாட்டு மைதா னத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் 74 ஆவது குடியரசு தின விழா நடை பெற்றறது. இதில் மாவட்ட ஆட்சியர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரி யாதை செலுத்தினார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்க ரே, பெரியகுளம் தொகுதி சட்டப் பேரவை  உறுப்பினர் சரவணக்குமார், மாவட்ட ஊராட்சித் தலைவி பிரிதா, துணைத் தலை வர் ராஜபாண்டி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் தண்டபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். காவல் துறைற, தீயணைப்புத் துறைற, ஊர்க் காவல் படையினரின் அணி வகுப்பு மரியாதை நடைபெற்றறது. தொடர்ந்து, அரசுத் துறைறகளில் சிறறப்பாக பணி யாற்றிய 275 அலுவலர்கள், பணியாளர்க ளுக்கு பதக்கம், பாராட்டுச் சான்றிதழ்க ளை ஆட்சியர் வழங்கினார். முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை சிறப்பாக செயல் படுத்திய 3 அரசு, தனியார் மருத்துவமனை களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப் பட்டன. அரசு சார்பில் மொத்தம் 70 பயனா ளிகளுக்கு ரூ. 13.20 லட்சத்துக்கான நலத் திட்ட உதவி, மானிய உதவிகள் வழங்கப் பட்டன. பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சி நடைபெற்றறது. தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதி மன்றத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி சி.  சஞ்சய்பாபா தலைமையில், குடும்ப நல நீதி மன்ற நீதிபதி வி. ரவி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.