districts

டீசல் மானியத்தை உயர்த்தி வழங்க மீனவர்கள் கோரிக்கை

தஞ்சாவூர், மே 24-  டீசல் மானியத்தை உயர்த்தி வழங்குவதோடு, உற்பத்தி விலைக்கே வழங்க வேண்டும் என  மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ள னர்.  இதுகுறித்து, தமிழ்நாடு மீனவர்  பேரவை மாநில பொதுச் செயலா ளர் அ.தாஜூதீன், தமிழக முதல்வர் மு.க.ஸ்டா‌லி‌னுக்கு அனுப்பி உள்ள  கோரிக்கை மனுவில் கூறியிருப்பதா வது:  “தமிழகத்தைச் சேர்ந்த படகு கள் கடந்த 2019 ஆம் ஆண்டு இலங்கை கடற்படையால் பிடிக்கப் பட்டு, இலங்கை கடற்கரையில் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் படகை இழந்து தொழில் இன்றி தவிக்கும் மீனவர்களுக்கு அரசு அறி வித்த நிவாரண தொகை ரூ.1.5 லட்சத்தை தமிழக அரசு உடனடி யாக வழங்க வேண்டும்.  ஒன்றிய அரசு தொடர்ந்து டீசல்  விலையை ஏற்றி, தற்போது யானைப்பசிக்கு சோளப்பொரி போல் சிறிதளவு குறைத்துள்ளது மீனவர்களுக்கு ஏற்புடையதாக இல்லை. மீனவர்கள் நட்டத்துடனே தொழில் செய்யும் நிலையில் உள்ள னர். எனவே, மீனவர்களுக்கு வழங்கும்  டீசலை உற்பத்தி விலைக்கே ஒன்றிய, மாநில அரசு வழங்க வேண்டும்.  மீன்பிடித் தடைக் காலம் முடி யும் தருவாயில் உள்ளதால், தடை முடிந்து படகுகள் எடுக்கும்போது மீனவர்கள் பிடித்து வரும் இறால், மீன், கணவாய் போன்ற ஏற்றுமதி கடல் உணவுப் பொருட்களை ஏற்று மதியாளர்கள் தங்களுக்குள் சிண்டி கேட் அமைத்துக் கொண்டு, மிகக் குறைந்த விலைக்கு எடுப்பதால் மீனவர்கள் மிகப்பெரிய சிரமத் திற்கு ஆளாகின்றனர். இது கடந்த பல ஆண்டுகளா கவே நடைபெற்று வருகிறது. இத னைத் தடுக்கும் விதமாக, தடைக்கா லம் முன்னதாகவே, கடல் உணவுப் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க அமைச்சர் மற்றும் அதிகா ரிகள், ஏற்றுமதியாளர்கள், மீன வர்களை அழைத்துப் பேசி, சரியான  விலை கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்”.  இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

;