districts

img

ஆரம்பக் கல்விதான் வாழ்க்கையின் அடித்தளம்

தஞ்சாவூர், ஏப்.22 -  ஆரம்பக் கல்வி தான் வாழ்க்கை யின் அடித்தளம் என்று இந்திய கடற் படைத் தளபதி ஹரிகுமார் கூறினார். இந்திய கடற்படையின் தளபதி யாக பணியாற்றுபவர் ஹரிகுமார். இவர் கேரளாவில் பிறந்தவர். இவரது தந்தை தஞ்சாவூரில் ஒன்றிய அரசின் உர தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றியதால், தஞ்சாவூரில் உள்ள தூய இருதய நர்சரி பள்ளி யில் 1966 முதல் 1972 ஆம் ஆண்டு வரை எல்கேஜி  முதல் 5 ஆம் வகுப்பு படித்துள்ளார்.

இந்நிலையில் தஞ்சாவூருக்கு ஏப்ரல் 22 திங்கள்கிழமையன்று வந்த ஹரிகுமார் தான் படித்த பள்ளிக்கு வருகை தந்தார். அப்போது பேண்டு வாத்தியங்கள் முழங்க பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் கடற்படை தளபதியை வரவேற்றனர். பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சி யில் பள்ளியின் வளர்ச்சிக்காக ரூ.5  லட்சம் காசோலையை வழங்கி ஹரி குமார் பேசியதாவது: இந்த பள்ளி யில் படித்த பழைய நினைவுகளை எண்ணிப் பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

இப்போது மாணவர்கள் அணிந்துள்ள சீருடை க்கும், அப்போது நாங்கள் அணிந்த சீருடைக்கும் அதிக மாற்றங்கள் உள்ளன. இந்த பள்ளியில் படித்ததால்தான் சிறந்த அடித்தளத்தை பெற முடிந்தது. ஆரம்பக் கல்விதான் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் அடிப்படையாக அமைகிறது. அதே  போல எனக்கும் இந்த பள்ளியில் சிறப்பான அடித்தளம் கிடைத்தது. குறிப்பாக இப்பள்ளியில் ஆங்கில மொழி அறிவு எனக்கு அதி கம் கிடைத்தது. அதே போல் கடின மாக ஆங்கிலச் சொற்களை எப்படி  உச்சரிக்க வேண்டும் என இங்கிருந்த ஆசிரியர்கள் பயிற்றுவித்தனர், அவர்களை எப்போதும் மறக்க முடியாது.

இந்தப் பள்ளியில் படித்த கார ணத்தால் நன்னடத்தை, கட்டுப்பாடு கள், கூட்டு முயற்சி ஆகியவற்றை எப்படி கையாள வேண்டும் என பின்னர் கற்றுக் கொள்ள பெரிதும் உதவியாக இருந்தது. இவ்வாறு அவர் பேசினார். பின்னர் பள்ளியில் மரக்கன்று களை நட்டும், தான் பயின்ற வகுப் பறைக்கு சென்று இருக்கையில் அமர்ந்தும், தன்னுடன் படித்த வகுப்புத் தோழர்களை பார்த்து  அவர்களிடம் நலம் விசாரித்தும், பள்ளியில் படிக்கும்போது எடுக்கப் பட்ட குழு புகைப்படங்கள், நாடகங் களில் நடித்த புகைப்படங்களை பார்த்து வியந்து, தன் மனைவி கலா விடம் எடுத்துக் கூறினார். முன்னதாக பள்ளிக்கு வந்த  ஹரிகுமாரை பள்ளியின் தலைமை யாசிரியை ரோஸ் டாப்னி வரவேற் றார். இறுதியாக மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதை பார்த்து மாணவர்களை ஹரிகுமார் பாராட்டினார்.

;