தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டை பேரூராட்சி, டெல்டா ரோட்டரி கிளப் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பொது மக்களுக்கு மஞ்சள் பை, துண்டுப் பிரசுரங்கள், மரக் கன்றுகள் வழங்கப் பட்டன. இதில் ரோட்டரி கிளப் தலைவர் ரவிச் சந்திரன், செயலர் முத்துக் குமரன், ரோட்டரி உதவி ஆளுநர் அறிவழகன், அய்யம்பேட்டை பேரூராட்சி செயல் அலுவலர் பழனிவேல், துப்புரவு ஆய்வாளர் செந்தில்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.