districts

img

பெரியகோயில் வியாபாரிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட கடைகள் திறப்பு

தஞ்சாவூர், அக்.1- தஞ்சாவூர் பெரியகோயில் வளாகத்தில் தலை யாட்டி பொம்மைகள், நடன பொம்மைகள் உள்ளிட்ட பொம்மைகள் விற்பனை செய்யப்படும் கடைகள் இருந்தன. கடந்த 2010 ஆம் ஆண்டில் நடைபெற்ற பெரியகோயில் ஆயிரமாவது ஆண்டு விழாவின் போது  இக்கடைகள் அகற்றப்பட்டு, எதிரே வாகன நிறுத்து மிடத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில், வாகன நிறுத்துமிடத்தில் இட நெருக்கடி ஏற்படுவதாகக் கூறி, 2014 ஆம் ஆண்டில் அங்கிருந்தும் இக்கடைகள் அகற்றப்பட்டன. இதை யடுத்து, கடைகளை ஒதுக்கீடு செய்யுமாறு மாவட்ட நிர்வாகத்திடம் பெரியகோயில் வியாபாரிகள் சங்கத்தினர் வலியுறுத்தினர். மேலும், இது தொடர் பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடுத்தனர். இதனிடையே, பர்மா பஜார் அருகிலும், சிவகங்கை  பூங்கா அருகிலுள்ள பெத்தண்ணன் கலையரங்கத்தி லும் கடைகளை ஒதுக்கீடு செய்வதாக மாவட்ட நிர்வாகம்  கூறியது. ஆனால், இந்த இடங்களில் கடைகள் அமைத் தால், வியாபாரத்துக்கு பயன் தராது என்பதால், பெரிய கோயில் அருகிலேயே வியாபாரிகள் இடம் கோரினர். இந்நிலையில், பெரியகோயில் அருகே மிருக வதை தடுப்புச் சங்கத்துக்கு சொந்தமான இடம் பெரிய கோயில் வியாபாரிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில், 34 கடைகள் கட்டப்பட்டதைத் தொடர்ந்து, இக்கடைகள் சனிக்கிழமை திறக்கப்பட்டன. இதுகுறித்து பெரியகோயில் வியாபாரிகள் சங்கத் தலைவர் ஆர்.ஜெயக்குமார் கூறுகையில், “இந்த வளா கத்தில் 34 கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு கடைக்கு  மாத வாடகை ரூ.3,000 வீதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது” என்றார்.

;