districts

img

பேராவூரணி நீலகண்டப் பிள்ளையார் கோவில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

தஞ்சாவூர், ஏப்.16 - பேராவூரணி நீலகண்ட பிள்ளையார் கோவில் தேரோட்டம் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தஞ்சை மாவட்டம் பேராவூரணி பகுதி யில் மிகவும் பிரசித்தி பெற்ற நீலகண்ட பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது. இந்த  கோவிலில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதே போல இந்த ஆண்டு திருவிழா கடந்த ஏப்.7 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.  விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட் டம் வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு நடந்தது. முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் வள்ளி தெய்வானையுடன் முருகன் தேரில் எழுந்தருளினார். இதைத்தொடர்ந்து தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்தனர். பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் என். அசோக்குமார், பேரூராட்சித் தலைவர் சாந்தி  சேகர், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் தாளா ளர்கள் சங்க நிறுவனத் தலைவர் டாக்டர் ஜி. ஆர்.ஸ்ரீதர், பாத்திரக்கடை பெ.கு.மாரியப் பன், எம்.பெத்துராஜ், வேல்ருத் மெடிக்கல் ராம்குமார், முருகானந்தம், டாக்டர் ராம லிங்கம், டாக்டர் வி.சௌந்தரராஜன், சபரி மலை அய்யப்ப சேவா சமாஜம் மாநிலச் செய லாளர் கமலா கே.ஆர்.வி.நீலகண்டன், வர்த்தக சங்க முன்னாள் செயலாளர் ஏ.டி.எஸ். குமரேசன், குருவிக்கரம்பை ஊராட்சி மன்றத்  தலைவர் எஸ்.வைரவன், கராத்தே பயிற்சி யாளர் ஷேக் அப்துல்லா மற்றும் பலர் கலந்து  கொண்டனர்.  சனிக்கிழமை சித்ரா பௌர்ணமி தீர்த்த திருவிழா நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு திருக்கல்யாணமும், இரவு தெப்ப உற்சவமும் நடக்கிறது. ஏப்.18  ஆம் தேதி விடையாற்றி உற்சவம், மண்டலா பிஷேகம் நடக்கிறது.

;