districts

பட்டுக்கோட்டை கல்வி மாவட்டம் தொடர்ந்து செயல்பட கோரிக்கை

தஞ்சாவூர், அக்.3 - பட்டுக்கோட்டை கல்வி மாவட்டம் தொ டர்ந்து செயல்பட வேண்டும் என சிபிஎம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்தசாமி வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், பட்டுக் கோட்டை கல்வி மாவட்டம், ஒருங்கிணைந்த  தஞ்சாவூர் மாவட்டத்தில் (தஞ்சை, திருவா ரூர், நாகை) 1968 இல்தொடங்கப்பட்டு, 54  ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்ட பழமை  வாய்ந்த கல்வி மாவட்டமாகும்.  பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தில், 56  அரசு, அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி கள், 52 அரசு, அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளிகள், 55,118 மாணவ, மாணவிகள், 2,207 ஆசிரியர்கள், அலுவலகப் பணியா ளர்கள் கொண்ட பெரிய மாவட்டம் ஆகும். தஞ்சாவூர் வருவாய் மாவட்டத்திலேயே, பட்டுக்கோட்டை கல்வி மாவட்டம் அதிக எண்ணிக்கையில் அரசு பள்ளிகளைக் கொண்ட கல்வி மாவட்டமாகும்.  தஞ்சாவூர் வருவாய் மாவட்டத்திலேயே, கடந்த ஆண்டு வரை தஞ்சாவூர், பட்டுக் கோட்டை, கும்பகோணம், ஒரத்தநாடு கல்வி  மாவட்டங்களில் பட்டுக்கோட்டை கல்வி மாவட்டம் மட்டுமே 10 மற்றும் 12 ஆம்  வகுப்பு தேர்ச்சி விழுக்காட்டில் முதலிடத்தில் உள்ள கல்வி மாவட்டம். பட்டுக்கோட்டை கல்வி மாவட்டம் கடற்கரை  ஓரமாக அமைந்துள்ளதால், ஏழை, எளிய  விவசாய மற்றும் மீனவ மக்களின் பிள்ளை கள் படித்து வருவதாலும், பல்வேறு இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படும் நிலை யில், மாணவர்களின் எதிர்கால நலன் கருதி  மாவட்டக் கல்வி அலுவலரின் அதீத கண்கா ணிப்பில் இருந்த பட்டுக்கோட்டை கல்வி மாவட்ட மாணவர்களும், பெற்றோர்களும் ஏறக்குறைய 90 கிலோ மீட்டர் பயணித்து தஞ் சைக்கு அலையும் நிலைக்கு தள்ளப்பட்டுள் ளனர். தமிழக அரசின் அரசாணை எண். 151/9.9.2022-ல் இடம்பெற்ற பட்டுக்கோட்டை கல்வி மாவட்டம் தற்போது இணை இயக்கு நர் (பணியாளர் தொகுதி) அவர்களின் செயல்முறைகள் ந.க. எண்: 49138/ஆ3/இ1/ 2022 நாள்.26.9.2022 இடம் பெறவில்லை என்பது  புதிராக உள்ளது. ஆகவே, மாணவ-மாணவி களின் எதிர்கால நலன் கருதி பட்டுக்கோட்டை  கல்வி மாவட்டம் தொடர்ந்து செயல்பட ஆவன செய்ய வேண்டும்  கூறப்பட்டுள்ளது.

;