districts

img

போக்குவரத்து தொழிலாளர்களின் 24 மணிநேர உண்ணாவிரதம் நிறைவு கீழ்வேளூர் எம்எல்ஏ நாகைமாலி பங்கேற்பு

கும்பகோணம், மார்ச் 5 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக தலைமையகம் முன்பு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் (சிஐடியு) சார்பில் கும்பகோணம் நாகை மண்டலங்களின் தொழிலாளர்கள் 24 மணி நர உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் 10 ஆண்டு கால வஞ்சனைக்கு முடிவுகட்ட வேண்டும். ஊதிய ஒப்பந்தத்தை இறுதிப்படுத்த வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும். 1.4.2003-க்கு பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு கழக ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, மருத்துவ காப்பீடு, ஓய்வு கால பலன்களை வழங்க வேண்டும். அதிகாரிகளின் அடாவடிக்கு முடிவு கட்ட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.  போராட்டத்திற்கு அரசு போக்குவரத்து ஊழியர் சங்க தலைவர் மணிமாறன் தலைமை வகித்தார். முன்னதாக வெள்ளிக்கிழமை காலை துவங்கப்பட்ட உண்ணாவிரதத்தை தஞ்சை மாவட்ட சிஐடியு மாவட்டச் செயலாளர் ஜெயபால் துவக்கி வைத்தார். கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினருமான நாகைமாலி உண்ணாவிரதத்தை முடித்து வைத்து உரையாற்றினார்.  சங்க மாவட்ட பொதுச் செயலாளர் கோவிந்தராஜ், பொறுப்பாளர்கள் கண்ணன், மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் சீனி.மணி, துணைப் பொதுச் செயலாளர் எஸ்.ராஜேந்திரன், வைத்தியநாதன், காரல் மார்க்ஸ், பொருளாளர் ஆர். வெங்கடாஜலபதி, ஓய்வூதியர் சங்க தஞ்சை கிளை தலைவர் பாஸ்கரன், சிபிஎம் தஞ்சை மாவட்ட செயலாளர் சின்னை.பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;