தஞ்சாவூர், ஏப்.16 - தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் தெற்கு ஒன்றியம் சானூரப்பட்டியில் வெள்ளிக்கிழமை மாலை, புதிய கிளை அமைப்பு மற்றும் கொடி யேற்று விழா கிளைச் செயலாளர் கே.வீரமணி தலைமையில் நடை பெற்றது. பின்னர் சானூரப்பட்டி கடைவீதியில் பொதுக்கூட்டம் நடை பெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி. கண்ணன், கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ். தமிழ் செல்வி, ஒன்றியச் செயலாளர்கள் கே.அபிமன்னன் (தஞ்சை), சி. பாஸ்கர் (பூதலூர் தெற்கு), ரமேஷ் (பூதலூர் வடக்கு) மாதர் சங்க ஒன்றி யத் தலைவர் எஸ்.மலர்கொடி ஆகி யோர் சிறப்புரையாற்றினர். இதில், ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட 23 பேர் தங்களை சிபிஎம்-இல் இணைத்துக் கொண்டனர்.