கும்பகோணம், மார்ச் 18- கும்பகோணம் அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையம் அருகே உரிய ஆவணங்கள் இல்லாமல் முறைகே டாக விற்பனை செய்ய குவித்து வைக்கப் பட்டிருந்த 250 நெல் மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே துக்காச்சி கிராமத்தில் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வந்தது. இந்த கொள்முதல் நிலையத்தில் அந்த கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் சம்பா பருவத்தில் அறுவடை செய்யப் பட்ட நெல்லை விற்பனை செய்து வந்த னர். ஆனால் துக்காச்சி கிராமத்தில் நெல் அறுவடை முடிந்ததும், வியாழக் கிழமையோடு (மார்ச் 17) கொள்முதல் நிலையத்தை மூட அதிகாரிகள் உத்தர விட்டனர். இந்நிலையில் கொள்முதல் நிலை யம் அருகே தனியாருக்கு சொந்தமான இடத்தில், இரு நாட்களுக்கு முன்பு திடீரென நெல் குவியல் இருந்த தால் சந்தேகமடைந்த அப்பகுதி விவ சாயிகள், தஞ்சாவூர் மாவட்ட முதுநிலை மண்டல மேலாளர் நா.உமாமகேஸ் வரிக்கு தகவல் அளித்தனர். இதை யடுத்து உமாமகேஸ்வரி உத்தரவுப்படி வியாழனன்று கும்பகோணம் கோட்ட துணை மேலாளர் டி.இளங்கோவன் மற்றும் அலுவலர்கள் துக்காச்சி கிராமத் துக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது கொள்முதல் நிலையத்தின் அருகே குவித்து வைக்கப்பட்டிருந்த சுமார் 250 மூட்டைகள் எந்தவித ஆவ ணங்களும் இன்றி இருந்ததால் அதனை பறிமுதல் உத்தரவிடப்பட்டது.
இதுகுறித்து அப்பகுதி விவசாயி கள் கூறுகையில், கொள்முதல் நிலைய பணியாளர்கள் துணையோடு இந்த நெல்லை விற்பனை செய்ய, இங்கு கொண்டு வந்து குவித்து வைத்துள்ள னர். கொள்முதல் நிலையத்தை மூடு வதற்கு முன்பு கடைசியாக விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது என்றனர். இதுகுறித்து கும்பகோணம் கோட்ட துணை மேலாளர் டி.இளங்கோவன் கூறுகையில், துக்காச்சி கிராமத்தில் தற்போது செயல்பட்ட இந்த கொள் முதல் நிலையம் மூடப்படுகிறது. திடீ ரென குவித்து வைக்கப்பட்ட இந்த 250 நெல் மூட்டைகளுக்கு யாரும் உரிமை கோரவில்லை. எனவே இவை பறி முதல் செய்யப்பட்டு, திருநாகேஸ்வரத் தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் நவீன அரிசி ஆலைக்கு அனுப்பப்படுகிறது. இந்த நெல் யாருடையது என்ற ஆவணங் களை ஒரு வாரத்துக்குள் சமர்பித்தால் அவை ஒப்படைக்கப்படும். இல்லை யென்றால் இந்த நெல் அரசு கணக்கில் சேர்க்கப்படும். இதுகுறித்து துக்காச்சி கொள்முதல் பணியாளர்களிடமும் உரிய விசாரணை நடத்தப்பட்டு வரு கிறது என்றார்.