districts

பேரூராட்சி குப்பை கிடங்கை அப்புறப்படுத்த கோரி மறியல்

பாபநாசம், செப்.14 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் திருப்பா லைத் துறை அருகே எஸ்பிஜே மெஷின் தெரு, காளியம்மன் கோயில் தெரு உள்ளது.  இந்தத் தெருக்களில் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன.  எஸ்பிஜே மெஷின் தெரு அருகில் பாப நாசம் பேரூராட்சி குப்பை கிடங்கு உள்ளது.  இந்த கிடங்கில் சேரும் குப்பை கழிவுகளால்,  எஸ்பிஜே மெஷின் தெரு, காளியம்மன் கோயில் தெரு குடியிருப்பு வாசிகள் அவதிப் பட்டு வருகின்றனர். இந்த குப்பை கிடங்கிற்கு  அவ்வப்போது தீ வைப்பதால், எழும் புகை யால் குடியிருப்பு வாசிகள் மூச்சுத் திணற லால் அவதிப்படுகின்றனர்.  இந்நிலையில், இப்பகுதி பொதுமக்கள் புதனன்று காலை தஞ்சாவூர் - கும்பகோணம் மெயின் சாலையில் பாபநாசத்தை அடுத்த உத்தாணி அருகே சாலை மறியலில் ஈடு பட்டனர். இந்த மறியலில் பாபநாசம் பேரூ ராட்சி கவுன்சிலர்கள் கீர்த்திவாசன், பிரேம்நாத்  பைரன், பாலு உள்ளிட்டோர் பங்கேற்றனர். தகவல் அறிந்து அங்கு வந்த பாபநாசம்  பேரூராட்சி தலைவி பூங்குழலி கபிலன்,  செயல் அலுவலர் (பொ) குமரேசன், பாப நாசம் இன்ஸ்பெக்டர் கலைவாணி மறிய லில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிடச் செய்தனர். சாலை  மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள், இந்த கிடங்கில் இனி மேல் குப்பைகளை கொட்டக் கூடாது. குப்பை கிடங்கை அப்புறப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.

;