districts

img

கும்பகோணம், ஒரத்தநாடு கல்வி மாவட்டங்கள் தொடர்ந்து செயல்படும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தகவல்

தஞ்சாவூர், செப்.25 - தஞ்சாவூர் தான்போஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், பள்ளிக்கல்வித்துறை மற்றும் கல்வியாளர் சங்கமம் இணைந்து நடத்திய, “ஆசிரியர்களுடன் அன்பில் நம்மில் ஒருவர்” என்னும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தமிழக அரசின் தலைமைக் கொ றடா முனைவர் கோவி.செழியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.  நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில்  மகேஸ் பொய்யாமொழி, “சிறகை  விரி” என்னும் மின் இதழினை வெளியிட்டும், ஆசிரியர் மனசு பெட்டியில் ஆசிரியர்கள் செலுத் திய கோரிக்கை மனுக்களை நேரில்  பெற்றுக் கொண்டும் பேசினார். நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியர் மரு.சுகபுத்ரா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மு.சிவகுமார், ஆசிரியர் மனசு திட்ட ஒருங்கி ணைப்பாளர் சதீஷ்குமார் மற்றும்  ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.  தமிழ் பல்கலைக்கழகம் தொடர்ந்து, தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழகத்தில், பசுமை இயக்கம் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. விழா வுக்கு தமிழக அரசின் தலைமை கொறடா கோவி.செழியன், கூடுதல்  ஆட்சியர்கள் சுகபுத்ரா, ஸ்ரீகாந்த், மாவட்ட வன அலுவலர் அகில் தம்பி ஆகியோர் தலைமை  வகித்தனர்.   தமிழ் பல்கலைக்கழக துணை வேந்தர் வி.திருவள்ளுவன் தலைமை வகித்தார்.

நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மரக்கன்றுகளை நட்டு வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் அன்பில் கூறியதாவது: உக்ரைன் நாட்டில் ஏற்பட்ட போரின்போது அங்கிருந்து தமிழக  மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்ட னர். அதுபோல் தற்போது மியான்மர் நாட்டில் சிக்கி தவிக்கும் தமிழர்களை பத்திரமாக மீட்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நட வடிக்கை எடுத்து வருகிறார். ஆக்கப் பூர்வமான கருத்து யார் கூறினா லும் நடவடிக்கை எடுக்கப்படும்.  கும்பகோணம், ஒரத்தநாடு கல்வி மாவட்டங்கள் ரத்து செய்யப் பட்டு தஞ்சாவூர், பட்டுக்கோட்டை கல்வி மாவட்டங்களோடு இணைக்க முடிவு செய்யப்பட்டிருந்த நிலை யில், அரசு கொறடா, எம்எல்ஏக் கள் விடுத்த கோரிக்கையை ஏற்று,  அவை தஞ்சாவூர் மற்றும்  பட்டுக்கோட்டை கல்வி மாவட்டங் களோடு இணைக்கப்படாது. கும்பகோணம், ஒரத்தநாடு கல்வி மாவட்டங்களாகவே தொடர்ந்து செயல்படும். இவ்வாறு அமைச்சர் கூறி னார். இந்நிகழ்ச்சியில் வட்டாட்சியர் மணிகண்டன் மற்றும் பல்வேறு அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

;