districts

இன்று  கும்பகோணத்தில் ஜமாபந்தி

கும்பகோணம், ஜூன் 29 - தஞ்சாவூர் மாவட்டம் கும்ப கோணம் வருவாய் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் 2022 ஆம் ஆண்டுக்கான வருவாய் தீர்வாய கணக்கு தணிக்கை எனப்படும் ஜமாபந்தி நிகழ்ச்சி கும்பகோணம் தாசில்தார் அலுவலகத்தில கடந்த  ஜூன் 23 ஆம் தேதி முதல் தொடங்கி  தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து தஞ்சை மாவட்டக் கூடுதல் ஆட்சியர் (வரு வாய்) சுகபுத்ரா தலைமையில் மூன் றாம் கட்ட ஜமாபந்தி நிகழ்ச்சி நடை பெற்றது. இதில் கும்பகோணம்  அருகில் உள்ள நாச்சியார்கோ வில் பகுதியில் உள்ள 22 கிராமங் களைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக் கைகள் தொடர்பான மனுக்களை அதிகாரிகளிடம் அளித்தனர். அப்போது கும்பகோணம் தாசில் தார் தங்க.பிரபாகரன் உள்ளிட்ட வருவாய் துறை அதிகாரிகள், பொதுமக்களிடம் இருந்து மனுக் களை பெற்றனர். இதில் பட்டா  மாறுதல், முதியோர் உதவித் தொகை உட்பட பல்வேறு சான்றி தழ் வேண்டி மொத்தம் 129 மனுக் கள் பெறப்பட்டன. இதில் முதி யோர் உதவித்தொகை 28 பேருக் கும், பட்டா மாற்றம் 16 பேருக்கும் என  உடனடி தீர்வு காணப்பட்டு சான்றி தழ்கள் வழங்கப்பட்டன. இதனைத்  தொடர்ந்து வியாழக்கிழமை கும்ப கோணம் பகுதியில் ஜமாபந்தி நடைபெறுகிறது.