districts

img

அய்யம்பேட்டையில் வெல்லம் கொள்முதல் நிலையம் அமைக்கப்படுமா?

அய்யம்பேட்டை, மார்ச் 27- தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை பகுதியில் கிடங்கு வசதியுடன் கூடிய வெல்லம் கொள்முதல் நிலை யம் அமைக்கப்படுமா என  விவசாயிகள் எதிர்பார்த்துள் ளனர்.  அய்யம்பேட்டை, வீர மாங்குடி, தேவன்குடி, மண லூர், கணபதி அக்ரஹாரம், உள்ளிக்கடை, பட்டுக்குடி  உள்ளிட்ட கிராமங்களில்  விவசாயிகள் தாங்கள் விளைவித்த கரும்பிலிருந்து அச்சு வெல்லம் தயா ரிப்பை மேற்கொண்டு வரு கின்றனர்.  ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் முதல் வாரத்தில் தொடங்கி மார்ச் வரை வெல்  லம் தயாரிப்பு நடைபெறும். பொங்கல் சமயத்தில் வெல்  லத்திற்கு கிராக்கி ஏற்படும் என்பதால் வெல்லம் தயா ரிக்கும் பணி மும்முரமாகும்.  இந்நிலையில், சமீபத் தில், தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த வேளாண் பட்ஜெட்  டில் வீரமாங்குடி வெல்லத் திற்கு புவிசார் குறியீடு பெற  நடவடிக்கை மேற்கொள்ளப்  படும் என அறிவித்திருந்தது. இதை பல்வேறு தரப்பின ரும் வரவேற்றனர். ஆனால்,  இப்பகுதி கரும்பு விவசா யத்தை மேம்படுத்த நடவ டிக்கை மேற்கொள்ள வேண்  டும் என விவசாயிகள் கோரி க்கை விடுத்துள்ளனர்.  இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ‘‘இங்கு தயாராகும் வெல்  லம் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக் காக அனுப்பி வைக்கப்படு கின்றன. இதனால் இப்பகுதி விவசாயிகளுக்கு வாகன  செலவும், நேர விரயமும் ஏற்  படுகிறது. மேலும் வீரமாங் குடி பகுதியில் தயாராகும் வெல்லத்திற்கு புவிசார் குறி யீடு பெற இருப்பதாக அறி வித்துள்ளது வரவேற்கத்தக் கது.  எனவே இப்பகுதி கரும்பு  விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு தமிழ்  நாடு அரசு அய்யம்பேட்டை பகுதியில் கிடங்கு வசதி யுடன் கூடிய வெல்லம் கொள்  முதல் நிலையத்தை அமைக்க வேண்டும். மேலும் இப்பகு திக்கென தனியாக கரும்பு  அலுவலரை நியமித்து அவ்  வப்போது விவசாயிகளுக்கு தகுந்த ஆலோசனைகள் வழங்க வேண்டும்’’ என்றனர்.

;