districts

ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் தஞ்சை மாவட்டத்தில் 168 பஞ்சாயத்துகள் தேர்வு

தஞ்சாவூர், ஜூன் 29 -  தஞ்சாவூர் மாவட்டத்திற்கு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்  வளர்ச்சி திட்டத்தின் கீழ் 2022 - 23 ஆம் ஆண்டிற்கு 168 கிராம பஞ்சாயத்துள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.  இத்திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம பஞ்சாயத்துக்களில், தரிசு நிலங்களை  விளை நிலமாக மாற்றும் திட்டம் செயல்படுத் தப்பட உள்ளது. ஒவ்வொரு கிராமப் பஞ்சாயத் துக்களிலும் உள்ள தரிசு நிலங்கள் தொகுப்பாக தேர்வு செய்யப்பட்டு, அப்பகுதி யில் உள்ள விவசாயிகளுக்கு இடுபொ ருட்கள் வழங்கப்பட்டு விளை நிலமாக மாற்றம் செய்யப்படும்.  தொகுப்பில் வரும் விவசாயிகள் தங்கள் பெயர், ஆதார் எண், தங்களுக்கு தேவைப் படும் இடுபொருள்கள், மரக்கன்றுகள், பண்ணை கருவிகள் பற்றி வேளாண் உதவி  அலுவலரிடம் தெரிவிக்கலாம். மேலும், அப்பகுதியில் உள்ள விவசாயிகள் பயன்பெ றும் விதத்தில் ஆழ்துளை கிணறுகள் அமைக் கப்பட உள்ளன. இத்திட்டத்தில் பயன்பெற ஆர்வமுள்ள கிராம விவசாயிகள் 15 ஏக்கர்  நிலத்திற்கு குறையாமல் குழுவாக அமைத்து  திட்டத்தில் பயன்பெறலாம்.  15 ஏக்கருக்கு மேல், 35 ஏக்கர் வரை தரிசு  நிலத்தொகுப்புகள் அமைக்கப்பட்டால் இரண்டு ஆழ்குழாய்க் கிணறுகள் அமைக்க லாம். ஆர்வமுள்ள விவசாயிகள் அருகில்  இருக்கும் வேளாண் விரிவாக்க மையங்க ளில் தங்களது கிராம பஞ்சாயத்துக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளதா என்ற விவ ரங்களையும், தரிசு நில தொகுப்பு உருவாக் கும் வாய்ப்புள்ள கிராம விவசாயிகள் வேளாண்மை துறை அதிகாரிகளை தொடர்பு  கொள்ள வேண்டும்.  இத்திட்டத்தின் கீழ் வரும் அனைத்து பஞ்சாயத்துக்களிலும் உள்ள சிறு, குறு விவசாயிகள் விடுபடாமல், ஏதேனும் ஒரு  திட்டத்தில் பயன் பெற வேண்டும் என  தஞ்சாவூர், வேளாண்மை இணை இயக்குநர்  அ.ஜஸ்டின் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்  தெரிவித்துள்ளார்.

;