districts

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் தட்டுப்பாடின்றி உரம் வழங்குக!

தஞ்சாவூர், அக்.6-  தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், தட்டுப்பாடின்றியும், வேறு  இடுபொருட்கள் வாங்க வேண்டும் என்ற நிபந்தனை யின்றியும், விவசாயப் பணி களுக்கு உரம் வழங்க வேண்  டும் என தமிழ்நாடு விவசாயி கள் சங்கம் வலியுறுத்தியுள் ளது.  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி எம்.எஸ்.விழா அரங்கில், தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் பேரா வூரணி - சேதுபாவாசத்திரம் ஒருங்கிணைந்த ஒன்றி யக்குழு கூட்டம், சேதுபாவா சத்திரம் ஒன்றியத் தலைவர்  வீ.கருப்பையா தலைமை யில் நடைபெற்றது.  கூட்டத்திற்கு, சேது பாவாசத்திரம் ஒன்றியச் செயலாளர் வி.ஆர்.கே. செந்தில் குமார், பேராவூ ரணி ஒன்றியத் தலைவர் பால சந்தர், ஒன்றியச் செயலாளர் பின்னவாசல் சிதம்பரம் மற்  றும் ஆர்.எஸ்.வேலுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், விவ சாயிகள் சங்க மாவட்டச் செய லாளர் என்.வி.கண்ணன் கலந்து கொண்டு பேசினார். மேலும் ஒன்றியக்குழு உறுப்  பினர்கள் கலந்து கொண்ட னர்.  கூட்டத்தில், “தனியார் உரக்கடைகளில் உரங்கள் விலையை உயர்த்தியும், வேறு இடுபொருட்கள் வாங்கினால் உரம் தரப்படும் எனும் நிர்ப்பந்தப் போக்கு  குறித்து, மாவட்ட ஆட்சியர், வேளாண் துறை அதிகாரி கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  ரெட்டவயல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், கரும்பு  கடன் பெற்ற விவசாயிகளுக்கு தள்ளுபடித் தொகையை சமாதானப் பேச்சுவார்த்தை கூட்டத்தில் ஒப்புக்கொண்ட படி, நவம்பர் 29- தேதிக்குள் பணத்தை விவசாயிகள் கணக்கில் வரவு வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகளி டம் கையெழுத்து இயக்கம் நடத்துவது. விவசாயிகள் சங்கத்திற்கு 3000 சந்தா  சேர்க்கை நடத்துவது” என வும் தீர்மானிக்கப்பட்டது.

;