districts

மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்க சிறப்பு முகாம்கள்

தஞ்சாவூர், மே 18 - தமிழக அரசு மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மூலம் வழங்கப்படும், மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெற்றவர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. மாவட்டத்தின் தொலை தூரங்களில் இருந்து, தஞ்சை வந்து அலைவதை தவிர்க்கும் வகையில், அடையாள அட்டை பெறாதவர்களுக்காக, குறுவட்ட அளவில் 50 சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக, திருவிடைமருதூர், திருவையாறு, பேராவூரணி ஆகிய வட்டங்களில், 11 குறு வட்டங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் சிறப்பு முகாம் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற உள்ளது. 

திருவிடைமருதூர் ஒன்றியம்
மே 19 (வியாழக்கிழமை) திருவிடைமருதூர், திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிகர் நடுநிலைப் பள்ளியிலும், மே 24 (செவ்வாய்க்கிழமை) ஆடுதுறை ஸ்ரீகுமரகுருபரர் தொடக்கப் பள்ளியிலும், மே 31 (செவ்வாய்க்கிழமை) முருகன்குடி, திருநாகேஸ்வரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும், ஜூன் 7 (செவ்வாய்க்கிழமை), நாச்சியார்கோவில் ராமகிருஷ்ணா உதவிபெறும் நடுநிலைப் பள்ளியிலும் நடைபெறுகிறது. 

திருவையாறு ஒன்றியம்
மே 26 (வியாழக்கிழமை) திருவையாறு சரஸ்வதி அம்மாள் தொடக்கப்பள்ளியிலும், ஜூன் 2 (வியாழக்கிழமை) நடுக்காவேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும், ஜூன் 9 (வியாழக்கிழமை) கண்டியூர் ஆதிதிராவிடர் தொடக்கப்பள்ளியிலும் நடைபெறுகிறது. 

பேராவூரணி ஒன்றியம்
மே 20 (வெள்ளிக்கிழமை) திருச்சிற்றம்பலம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியிலும், மே 27 (வெள்ளிக்கிழமை) குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும், ஜூன் 4 (சனிக்கிழமை) பேராவூரணி ஊராட்சி ஒன்றிய கிழக்கு தொடக்கப் பள்ளியிலும், மே 10 (வெள்ளிக்கிழமை) ஆவணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.  இம்முகாம்களில் அரசு மருத்துவர்கள் மாற்றுத் திறனாளிகளை பரிசோதனை செய்து வழங்கும் சான்றிதழின் அடிப்படையில் மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது. இதுவரை அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் 6 புகைப்படத்துடன் இதற்கு முன் சிகிச்சை பெற்ற ஆவணங்களுடன் வந்து பயன் பெறலாம். மேலும், இதுவரை தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்காத மாற்றுத்திறனாளிகள், நடைபெறும் முகாமில் மேற்குறிப்பிட்ட ஆவணங்கள், அடையாள அட்டை நகலுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

;