districts

கணவர் குடும்பத்தினர் கொலை மிரட்டல்: 3 குழந்தைகளோடு ஆட்சியரிடம் பெண் புகார்

தஞ்சாவூர், செப்.20 - பட்டியல் வகுப்பைச் சேர்ந்தவர் என்ப தால், கணவர் குடும்பத்தினர் கொலை மிரட்டல் விடுவதாக மாவட்ட ஆட்சியரிடம் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் திங்கட்கிழமை பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் பலரும் தங்களது கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலி வரிடம் வழங்கினர். இந்த மனுக்கள் மீது அரசுத்துறை அதிகாரிகள் தீர்வு காண உத்தரவிட்டார்.
கணவர் குடும்பத்தினர் மீது புகார்
பூதலூரை அடுத்த மேலத்திருவிழாப் பட்டியைச் சேர்ந்த தே.திலகவதி என்பவர், தனது மூன்று குழந்தைகள், கணவர் தேனேஷ் வரனுடன் வந்து மனு அளித்தார். அந்த மனு வில், “நான் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த வள், எனது கணவர் பிற சமூகத்தைச் சேர்ந்த வர். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டு மூன்று குழந்தைகள் உள்ள னர். தற்போது எனது கணவர் குடும்பத்தி னர் எங்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்தும், பொது குடிநீர் குழாயில் தண்ணீ்ர் பிடிக்கக் கூடாது என்றும், குடும்பத்தோடு கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி வருகின்றனர். எனவே, நாங்கள் நிம்மதியாக வாழ்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு” கூறியிருந்தனர். இதுகுறித்து உடனடியாக காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சி யர் பரிந்துரைத்துள்ளார்.
முதியோர் பராமரிப்பு சட்டத்தில் சொத்தை மீட்க கோரிக்கை
தஞ்சாவூர் பூக்கார 3-ஆவது தெருவைச்  சேர்ந்தவர் ஆர்.புகழேந்தி (74). இவருக்கு ஒரு மகன் இருந்தார். எனது மகனும், மனைவி யும் இறந்து விட்டனர். நான் வங்கி மூலம்  கடன் பெற்று ஒரு விளார் ரோடு தில்லை நக ரில் பிளாட் வாங்கி அதனை எனது மகனுக்கு  எழுதிக் கொடுத்தேன். தற்போது என்னை அந்த பிளாட்டுக்குள் எனது மருமகள் அனு மதிக்காமல் அடித்து விரட்டுகிறார். நான் வாழ முடியாமல் சிரமப்பட்டு வருகிறேன். எனவே  முதியோர் பராமரிப்பு சட்டத்தின் கீழ் நடவ டிக்கை எடுத்து, நான் கடன் வாங்கிய சொத்தை மீட்டுத் தர வேண்டும் என மனு அளித்தார். இந்த மனுவை கோட்டாட்சியர் விசாரணைக்கு, மாவட்ட ஆட்சியர் பரிந்து ரைத்துள்ளார்.
பணிகள் முடங்கியதாக  ஊராட்சி உறுப்பினர்கள் புகார்
தஞ்சாவூர் அருகே வண்ணாரப்பேட்டை ஊராட்சியில் உள்ள ஊராட்சி மன்ற உறுப்பி னர்கள் 5 பேர் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கிய  மனுவில், வண்ணாரப்பேட்டை ஊராட்சியில்  14 மற்றும் 15 வது நிதிக்குழு மானியத்தில் தார்ச்சாலை, வடிகால் வசதி, குடிநீர் வசதிகள்  ஆகிய பணிகள் தொடங்க அனுமதிக்கப் பட்டு, ஊராட்சி மன்றத் தலைவரின் செயல் பாடுகளால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வேலை நடைபெறாமல் முடங்கியுள்ளது. எனவே இந்த பணிகளை விரைவுபடுத்தி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர  வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

;